அருள்மிகு நீலமேகப் பெருமாள்,தஞ்சாவூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் நகரைத் தாண்டியதும் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இந்த வெண்ணாற்றங்கரையில் இப்போது மூன்று கோவில்கள் உள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமான்கள் எழுந்தருளியுள்ளனர்.மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரு திவ்யதேசமாகவே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று கோவில்களும் ஒரு பர்லாங் சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளது.
1. தஞ்சை மாமணிக் கோவில்
மூலவர் : நீலமேகப் பெருமாள்
தாயார் : செங்கமலவல்லி
தீர்த்தம் : கன்னிகா புஷ்கரணி
விமானம் : சௌந்தர்ய விமானம்
2. மணிக்குன்றம்
மூலவர் : மணிக்குன்றப் பெருமாள்
தாயார் : அம்புச வல்லி
தீர்த்தம் : ஸ்ரீ ராம தீர்த்தம்
விமானம் : மணிக்கூட விமானம்
3. தஞ்சையாளி நகர்
மூலவர் : நரசிம்மர்
தாயார் : தஞ்சை நாயகி
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி
விமானம் : வேதசுந்தர விமானம்
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Saturday, October 11, 2008
[+/-] |
அருள்மிகு நீலமேகப் பெருமாள்,தஞ்சாவூர் |
Monday, September 15, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #77 அருள்மிகு குமரி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி |
அருள்மிகு குமரி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையின் கரையில் அமைந்துள்ளது குமரி அம்மன் ஆலயம்.
இறைவி: குமரி அம்மன்
தற்போதைய பெயர் : கன்னியா குமரி
பாணாசுரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த தேவி பராசக்தி தவத்தில் ஈடுபடுகிறாள். கோயிலில் உள்ள குமரி அம்மன் கிழக்கு நோக்கித் தவக்கோலத்தில் வலக்கையில் ஜபமாலையுடன் நிற்கிறாள். கன்னியாகுமரியில் முக்கடல் தீர்த்த ஸ்நானம் மிகவும் முக்கியமானது. கன்னியாகுமரியில் இறைவனின் அருள்சக்தியே தேவி உருவமாகத் தவம் செய்வதாகக் கூறுவார்கள்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 2 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, June 22, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #65 அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை |
அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி தொலைவில் உள்ளது.
தற்போதய பெயர் : வடகுரங்காடுதுறை
இறைவன் : தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர்
இறைவி : ஜடா மகுட நாயகி
தலமரம் : தென்னை
தீர்த்தம் : வாலிதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
வாலியும்,சுக்ரீவனும் வழிப்பட்ட இரண்டு சிவஸ்தலங்கள் குரங்காடுதுறை என்ற பெயரில் இருக்கின்றன. திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் உள்ளதால் இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது.போரில் தனது அறுந்த வாலை இத்தலத்து இறைவனை வழிப்பட்டு மீண்டும் வால் வளரும் பேறு பெற்றான்.கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோபுரத்தில் வாலி இறைவனை வழிப்படும் சிற்பமும் ,ஈசன் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை
Sunday, June 1, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #62 அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி |
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
மயிலாடுதுறை - திருவாரூர் பஸ் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்கி,அங்கிருந்து எரவாஞ்சேரி பஸ் மார்க்கத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் திலதர்ப்பணப்புரி புண்ணியத்தலம் உள்ளது.
இறைவன்: முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்
இறைவி: சொர்ணவல்லி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தலமரம் : மந்தார மரம்
தற்போதைய பெயர் : திலதர்ப்பணப்புரி (திலதைப்பதி)
பித்ரு தலங்கள் இந்தியாவில் மொத்தம் ஏழு.காசி,திரிவேணி சங்கமம்,ராமேஸ்வரம்,ஸ்ரீ வாஞ்சியம்,திருவெண்காடு,கயா என்கிற ஆறோடு ஏழாவது சிறப்புத்தலம் திலதர்ப்பணப்புரி.ராமாயணத்தில்,சீதா பிராட்டியை ராவணன் கடத்திச் செல்லும் போது ஜடாயு பறவை வழிமறித்து சண்டை போட்டு வாளினால் வெட்டுப்பட்டு இறந்தது. இலங்கையை நோக்கி வரும் போது,திலத்தர்ப்பணப்புரிக்கு வந்த ராமபிரானும்,லட்சுமணனும் தங்கள் தந்தையான தசரத சக்ரவர்த்திக்கும்,தந்தைக்கு நிகராக நேசித்த ஜடாயு பறவைக்கும் திலதர்ப்பணப்புரியில் தர்ப்பணம் செய்து பிண்டம் இட்டனர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி
Sunday, April 20, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #56 அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோவில், திருக்கடிகை(சோளிங்கர்) |
அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோவில், திருக்கடிகை(சோளிங்கர்) பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
சோளிங்கர் அரக்கோணத்திலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. போரூர்,காஞ்சிபுரம் வழியாகவும் செல்லலாம்.
மூலவர் : யோக நரசிம்மர் அக்காரக்கனி ,வீற்றிருந்த திருக்கோலம்
தாயார் : அம்ருதவல்லி
உற்சவர் : தக்கான்
தீர்த்தம் : அம்ருத தீர்த்தம்
விமானம் : சிம்ஹ விமானம்
தற்போதைய பெயர் : வெள்ளியங்குடி
அஹோபில மலை தான் மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த இடம்.மீண்டும் ஒரு முறை முனிவர்களுக்காக இந்த அவதாரம் மேற்கொண்டார்.ஒரு கடிகை(24 நிமிடம்) இங்கு
தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர் வந்தது. கடிகை-நாழிகை அசலம் - மலை ,எனவே கடிகாசலமானது. சுமார் 500 அடி உயரமுள்ள
கடிகாசல மலை மீது மூலவரும், அதனருகில் உள்ள சின்ன மலையில் சங்கு சக்கரங்களுடன் இலங்கும்,ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர். தொட்டாச்சாரியார் ,எறும்பியப்பா வாழ்ந்த புனித
தலமிது.பேயழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாச்னம் செய்த ஸ்தலம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோவில், திருக்கடிகை(சோளிங்கர்)
Sunday, April 13, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #55 அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோவில், திருக்கரம்பனூர |
அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோவில், திருக்கரம்பனூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவில் திருச்சியிலிருந்து வடக்கே 5 மைல் தொலைவில் உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் உள்ளது
மூலவர் : புருஷோத்தமன் ,புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : பூர்ணவல்லி
தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்
விமானம் : உத்யோக விமானம்
தற்போதைய பெயர் : கரம்பனூர் (உத்தமர் கோவில்)
மும்மூர்த்திகளும் ஒரே கோவிலுள் எழுந்தருளியுள்ளதால் இது த்ரிமூர்த்தி தலம் ஆகும்.பிச்சையெடுத்து வந்த நிலையில் தனது பாத்திரம்(கபாலம்) நிறைந்த்தால் பிட்சாடன மூர்த்தியாக சிவன் எழுந்தருளியுள்ளார்.எனவே பிட்சாண்டார் கோவில் என்று ம்றுபெயரும் உண்டு.இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் பிரம்மனுக்கு உள்ள கோயிலில் சரஸ்வதி தேவி எழுந்தருளியுள்ளார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 25 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோவில், திருக்கரம்பனூர்
Sunday, April 6, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #54 அருள்மிகு விண்ணகரப்பெருமாள் திருக்கோவில், நாதன்கோவில் |
அருள்மிகு விண்ணகரப்பெருமாள் திருக்கோவில், நாதன்கோவில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
நாதன்கோவில் கும்பகோணத்திலிருந்து 3 மைல் தொலைவில் உள்ளது. இங்கு தங்கும் வசதிகள் இல்லை. கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்து 11/2 மைல் நடந்தும் இத்தலத்தை அடையலாம்.
மூலவர் : விண்ணகரப் பெருமாள்,யோக ஸ்ரீநிவாசன்
தாயார் : செண்பகவல்லி
உற்சவர் : ஜெகந்நாதன்
தீர்த்தம் : நந்தி தீர்த்த புஷ்கரிணி
விமானம் : மந்தார விமானம்
தற்போதைய பெயர் : நாதன்கோவில் (திருநந்திபுர விண்ணகரம்)
மஹாவிஷ்ணுவின் திருமார்பில் தான் வாசம் செய்ய வேண்டும் என தேவி திருப்பாற்கடலிலிருந்து புறப்பட்டு,செண்பகாரண்யம் என்னும் இந்த இடத்தில் கடுந்தவம் செய்ய, ஐப்பசி மாதம் சுக்கில பட்ச வெள்ளிக்கிழமையன்று தேவிக்கு தரிசனம் தந்து தன்னுடைய நெஞ்சில் ஏற்றுக் கொண்டார்.மன்னார்குடியிலிருந்து நாதன் கோவில் வரை உள்ள பகுதியை செண்பகாரண்யம் என்று அழைப்பர்.இந்த ஊர் காளமேகப் புலவரின் பிறப்பிடம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 41 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு விண்ணகரப்பெருமாள் திருக்கோவில், நாதன்கோவில்
Sunday, March 16, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #51அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில், திருவெள்ளறை |
அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில், திருவெள்ளறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
திருவெள்ளறை திருச்சியிலிருந்து 13 மைல் தொலைவில் துறையூர் செல்லும் பாதையில் உள்ளது.
மூலவர் : புண்டரீகாட்சன் ,நின்ற திருக்கோலம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : செண்பக வல்லி , பங்கயச் செல்வி
உற்சவர் : பங்கயச் செல்வி
தீர்த்தம் : 7 தீர்த்தங்கள்
விமானம் : விமலாக்ருத விமானம்
தற்போதைய பெயர் : திருவெள்ளறை
ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய இதன் தொன்மையை குறிக்கவே ஆதிவெள்ளறை என இது அழைக்கப்படுகிறது.சிபிச் சக்ரவர்த்திக்கும்,மார்க்கண்டேயருக்கும் வெள்ளைப் பன்றியின் மூலமாக(வராஹ) புற்றிலிருந்து தோன்றி காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது. இத்திருக்கோவிலுக்கு அருகிலுள்ள நீலிவனம் கிராமத்தில் சிவன் தன் கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலம் நீங்குவதற்காக இப்பெருமானை வழிப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கின்றன. இராமானுஜர் சிலகாலம் வாசம் செய்த ஸ்தலம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில், திருவெள்ளறை
Sunday, January 27, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #44-அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில், திருப்பேர்நகர் |
அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில், திருப்பேர்நகர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
திருப்பேர்நகர் என்றால் யாருக்கும் தெரியாது.கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும்.இத்தலம் திருச்சியிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ளது.
மூலவர் : அப்பக்குடத்தான்
தாயார் : இந்திராதேவி
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
விமானம் : இந்திர விமானம்
தற்போதைய பெயர் : கோவிலடி
இத்தலம் மிகவும் பழமையானது,ஸ்ரீரெங்கத்திற்கு முன்னதாக ஏற்பட்டதென்றும்,அதனால் தான் கோவிலடி அதாவது ஸ்ரீரெங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்துக் கொடுத்த
ஸ்தலமென்பதால் கோவிலடி எனப் பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது.நம்மாழ்வார் இப்பெருமானை பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச் சென்றார்.இங்கு பெருமானுக்கு தினந்தோறும் இரவில் அப்பம் அமுது செய்துப் படைக்கப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில், திருப்பேர்நகர்
Sunday, January 20, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #43 அருள்மிகு பாண்டவதூதர் திருக்கோவில், திருப்பாடகம் |
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
அருள்மிகு பாண்டவதூதர் திருக்கோவில், திருப்பாடகம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
இத்திருத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபத்தில் உள்ளது.
மூலவர் : பாண்டவதூதர்,அமர்ந்த திருக்கோலம்
தாயார் : ருக்மணி சத்தியபாமா
தீர்த்தம் : மத்ஸய தீர்த்தம்
விமானம் : பத்ர விமானம்,வேதகோடி விமானம்
பாடு - மிகப் பெரிய அகம் (இருப்பிடம்) என்ற பொருளில் பாடகம் ஆனதாகக் கூறுவர்.மகாபாரதத்தில் பாண்டவர்கள் பொருட்டு துரியோதனன் சபைக்கு தூது சென்ற கண்ணனைக் கொல்ல துரியோதனன் திட்டமிட்டு கண்ணன் அமரக் கூடிய ஆசனத்தினடியில் ஒரு நிலவறையை உருவாக்கி அதன் மீது பசுந்தலைகள் இட்டு மூடிவைத்தான்.அவன் திட்டப்படியே உள்ளே விழுந்த கண்ணன் நிலவரையிலிருந்த மல்லர்களை மாய்த்து விஸ்வரூபனாய் நின்றார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 23 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
To download the episode
Sunday, January 13, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #42 அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில், திருப்பார்த்தன்பள்ளி |
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில், திருப்பார்த்தன்பள்ளி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சீர்காழியிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. திருவெண்காட்டிலிருந்து கிழக்கே 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.
மூலவர் : தாமரையாள் கேள்வன்,நின்ற திருக்கோலம்
தாயார் : தாமரை நாயகி
உற்சவர் : கோலவில்லி ராமன்
தீர்த்தம் : கட்க புஷ்கரணி
விமானம் : நாராயண விமானம்
தற்போதைய பெயர் : பார்த்தன்பள்ளி
இத்தலத்திற்கு வந்த அர்ச்சுனனிற்கு தாகம் உண்டாக,கண்ணன் இவ்விடத்தில் தோன்றி கத்தி ஒன்றை அர்ஜுனனிடம் கொடுத்தான்.அக்கத்தியால் மண்ணை கீறி பூமியை பிளக்க உடனே அங்கு தூய கங்கை நீர் பெருகியது.பார்த்தனுக்காக உண்டான கோவிலானதால் பார்த்தன்பள்ளியாயிற்று.பார்த்தனாகிய அர்ச்சுனனிற்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 36 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில், திருப்பார்த்தன்பள்ளி
Saturday, January 5, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #41 அருள்மிகு சலசயனப்பெருமாள் திருக்கோவில், திருச்சிறுபுலியூர் |
அருள்மிகு சலசயனப்பெருமாள் திருக்கோவில், திருச்சிறுபுலியூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து கொல்லுமாங்குடி என்ற சிற்றூரை அடைந்து அங்கிருந்து கிழக்கே 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.
மூலவர் : சலசயனப்பெருமாள,புஜங்க சயனம்
தாயார் : திருமகள் நாச்சியார்
உற்சவர் : க்ருபா சமுத்திர பெருமாள்
தீர்த்தம் : மானஸ புஷ்கரணி
விமானம் : நந்தவர்த்தனம்
தற்போதைய பெயர் : சிறுபுலியுர்
புஜங்கசயனத்தில் சிறிய உருவமாயிருந்த பெருமாளைக் கண்டு திருமங்கையாழ்வார் குறைபட இறைவன் அவரது குறை தீர்க்க திருக்கண்ணமங்கையில் பெரிய உருவை அருளிச் செய்த ஸ்தலம்.நாகதோஷ நிவர்த்தியும் புத்திர சந்தான விருத்தியும் இத்தலத்திற்கு எற்பட்ட தனி மகத்துவம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு சலசயனப்பெருமாள் திருக்கோவில், திருச்சிறுபுலியூர்்
Sunday, December 30, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #40 அருள்மிகு மகாகாளேஸ்வரர் ஆலயம் |
அருள்மிகு மகாகாளேஸ்வரர் ஆலயம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திண்டிவனத்திலிருந்து பாண்டி செல்லும் வழியில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சென்று இன்னும் சற்று தள்ளி இடது பக்கம் இரும்பை ரோடு சாலை பிரியும்.அங்கிருந்து 2 கி.மி தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது.
இறைவன் : மகாகாளேஸ்வரர்,மகாகாள நாதர்
இறைவி : மதுரசுந்தர நாயகி, மொழியம்மை
தலமரம் : புன்னை
தீர்த்தம் : மகாகாள தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தற்போதைய பெயர் : இரும்பை
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 11 மணி வரை, மாலை 5 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 12 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, December 23, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #39 - அருள்மிகு தாலபுரீஸ்வரர் ஆலயம், திருப்பனங்காடு |
அருள்மிகு தாலபுரீஸ்வரர் ஆலயம், திருப்பனங்காடு பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
காஞ்சிபுரத்திலிருந்து பெருங்காட்டூர் செல்லும் பேருந்து வழியில் உள்ளது.ஊர் வரையில் பேருந்து வசதியில்லை.திருப்பனங்காடு கூட்டு சாலையில் இரங்கி உள் செல்ல வேண்டும்.
இறைவன் : தாலபுரீஸ்வரர்,கிருபாநாதேஸ்வரர்
இறைவி : அமிர்த்தவல்லி,கிருபாநாயகி
தலமரம் : பனைமரம்
தீர்த்தம் : சடாகங்கை
பதிகம் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
தற்போதைய பெயர் : திருப்பனங்காடு (பனங்காட்டூர்)
தரிசன நேரம் : காலை 7 மணி 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
பூசைக்காலங்கள்: காலை சந்தி-காலை 8 மணி;உச்சிகாலம் 11-12, சாயங்காலபூசை - மாலை 5 மணி.
இறைவன் அடியாராய் மாறி சுந்தரர் மற்றும் தொண்டர்களுக்கு இத்தலத்தின் வழியே செல்லும் போது உணவு அளித்து,பருக நீர் அளித்து பசி மயக்கத்தை போக்குகிறார்.நீர் எவ்வூர் என சுந்தரர் கேட்டதற்கு
"நான் பனங்காட்டிற்கும் வெம்பாக்கத்திற்குமாய் இருப்பவன்" எனக்கூறியதால்
"வன் பார்த்தான் பனங்காடு" எனப் பெயர் ஏற்பட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 53 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு தாலபுரீஸ்வரர் ஆலயம், திருப்பனங்காடு
Sunday, December 16, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #38 - அருள்மிகு வில்வநாதீஸ்வரர் ஆலயம், திருவல்லம் |
அருள்மிகு வில்வநாதீஸ்வரர் ஆலயம், திருவல்லம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலைப் பகுதிகளைத் தாண்டி திருவலம் இரும்புப் பாலத்தைத் தாண்டி திருவலத்தை அடையலாம்.
தற்போதய பெயர் : திருவலம்
இறைவன் : வில்வநாதீஸ்வரர்,வல்லநாதர்
இறைவி : வல்லாம்பிகை,தனுமத்யாம்பாள்
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : கௌரிதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 7.30 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
கணபதி அம்மையப்பரை வலம் வந்து வணங்கி வழிபட்டு,மாங்கனி பெற்றதால் இவ்விடம் திருவலம் என்று வழங்கப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
Sunday, December 9, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #37 - அருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம் |
அருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
செங்கல்பட்டிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பேருந்து சாலையில் திருப்போருர் செல்லும் பாதையில் 4-வது கி.மி-ல் இத்தலத்தை அடையலாம்.
தற்போதய பெயர் : திருவடிசூலம்
இறைவன் : இடைச்சுரநாதர்,ஞானப்புரீஸ்வரர்
இறைவி : கோபர்த்தனாம்பிகை
தலமரம் : இலுப்பை
தீர்த்தம் : சனத்குமாரதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
சிவபெருமான் இடையனாக வந்து திருஞான சம்பந்தத்ரை அழைத்துச் சென்றதால் திருஇடைச்சுரம் என்று வழங்கப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, December 2, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #36 அருள்மிகு திருமாகறலீஸ்வரர் ஆலயம், திருமாகறல் |
அருள்மிகு திருமாகறலீஸ்வரர் ஆலயம், திருமாகறல் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
காஞ்சீபுரத்திலிருந்து உத்திரமேரூர் பேருந்து பாதையில் உள்ளது. வழி ஓரிக்கை சாலையோரத்தில் கோயில் உள்ளது.
இறைவன் : திருமாகறலீஸ்வரர், உடும்பீசர், அகத்தீஸ்வரர்
இறைவி : திரிபுவன நாயகி
தலமரம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னிதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தற்போதைய பெயர் : திருமாகறல்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; உச்சிகாலம் பகல் 12 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி; அர்த்த சாமபூஜை இரவு 8 மணி வரை.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Monday, November 26, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #35 அருள்மிகு திருக்கள்ளீஸ்வரர் ஆலயம், திருக்கண்டலம் (திருக்கள்ளில்) |
அருள்மிகு திருக்கள்ளீஸ்வரர் ஆலயம், திருக்கண்டலம் (திருக்கள்ளில்) பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சென்னையிலிருது இத்தலம் வர சில நேரங்களில் பேருந்து உண்டு, சென்னை கோயம்பேட்டிலிருந்து பெரியபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி 37 - ஆவது கி.மீ உள்ள கண்ணிகைப் பேர் (கண்ணிபுத்தூர்) இறங்கவேண்டும். அங்கிருந்து இடதுபக்கம் திருக்கண்டலம் சாலையில் 3 கி.மீ சென்று கோயிலைடையலாம்.
இறைவன் : சிவானந்தேஸ்வரர்
இறைவி : ஆனந்த வல்லி
தலமரம் : கள்ளிச்செடி
தீர்த்தம் : நந்தி தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தற்போதைய பெயர் : திருக்கண்டலம்
தரிசன நேரம் : திருக்கோயிலுள் அர்ச்சகர் இல்லம் உள்ளதால் இரவு 8 மணிக்குள் எந்த நேரத்தில் சென்றாலும் தரிசிக்கலாம்.
பூசைக்காலங்கள்: காலை சந்தி-காலை 8 மணி; சாயங்காலபூசை - மாலை 5 மணி.
திருஞானசம்பந்த சுவாமிகள் இத்தலம் வந்தது, சிவபெருமான் பூஜைப்பெட்டியை மறைத்ததினால் ’கள்வர்’ யாரோ என் பெட்டியை எடுத்துச் சென்றனர் எனக் கூறி பதிகம் பாடியதால் ’திருக்கள்ளம்’ திருக்கள்ளில் என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கள்ளிச்செடிக் கீழ் இறைவன் தோன்றியதால் திருக்கள்ளி(ல்) என்று பெயர் ஏற்பட்டதாயும் கூறுகின்றனர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 53 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு திருக்கள்ளீஸ்வரர் ஆலயம், திருக்கண்டலம் (திருக்கள்ளில்)
Sunday, November 11, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #33 (அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோவில்,திரிசூலம்,சென்னை) |
அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோவில்,திரிசூலம்,சென்னை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
பழமையான சோழர்கால பெருங்கோயில்களில் திரிசூலநாதர் கோயிலும் ஒன்று.மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு எதிரில் திரிசூலம் ரயில்நிலையம்.ரயில்நிலையத்தில் இறங்கி இடதுபக்கமாகச்
செல்லும் மலைப்பாதையில் ஒரு கி.மி. நடந்தால் நான்கு மலைகளுக்கு நடுவில் திரிசூலநாதர் திருக்கோவில் தென்படும்.
இறைவன்: திரிசூலநாதர்
இறைவி : திரிபுரசுந்தரி
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 9
திரிசூலநாதர் ஆலய நுழைவாயிலில் ராஜகோபுரம் கிடையாது.முதலில் தென்படுவது நீண்ட கொடிமரம்,அடுத்து பலிபீடம்.உள்மண்டபத்தில் வலம் வரும் போது முதலில் தெற்கு பிரகாரத்தில் சீறும்
பாம்பை பூணுலாக அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரி நாக யக்ஞோபவீத கணபதி.அடுத்து தென்முகக் கடவுளான தட்சினாமூர்த்தி தரிசனம்.மேற்குப்பிரகாரம் ப்க்கம் திரும்பினால்,நின்ற நிலையில்
ஸ்ரீநிவாசப்பெருமாள்!ஈசன் கருவறைக்குப் பின்னால் லிங்கோத்பவர்.எதிரே வடக்குப் பார்த்த ஆறுமுகப்பெருமாள்,மார்க்கண்டேயர்,சிவகாமி அம்மையுடன்
ஸ்ரீநடராஜப்பெருமான்,பிரம்மா,சண்டிகேஸ்வரர் ம்ற்றும் விஷ்ணு துர்கையின் விஷேச தரிசனம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 23விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோவில்,திரிசூலம்,சென்னை
Monday, November 5, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #32 (ஸ்ரீ அழகிய சிங்கர் - நரசிம்மர் ஆலயம்,திருவேளுக்கை) |
ஸ்ரீ அழகிய சிங்கர் - நரசிம்மர் ஆலயம்,திருவேளுக்கை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
இத்தலம் காஞ்சிபுரத்திலேயே விளக்கொளி பெருமாளின் திருக்கோவிலிலிருந்து இடதுபுறம் செல்லக்கூடிய சாலையில், மூன்று தெருக்களைக் கடந்து பிரகாசமாகத் தென்படுகிறது. அட்டபுயக்கரத்தான் சன்னதியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மூலவர் : அழகிய சிங்கர், நரசிம்மர், முகுந்த நாயகன், ஆள் அரி
தாயார் : வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி
தீர்த்தம் : கனக ஸரஸ், ஹேம சரஸ்
விமானம் : கனக விமானம்
வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். நரசிம்ம மூர்த்தி இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி காலப்போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது. ஸ்ரீஸ்வாமி தேசிகன் இப்பெருமான் மீது ’காமாஸி காஷ்டாகம்’ அருளிச் செய்துள்ளார். பேயாழ்வார் 3 பாகரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்