Sunday, April 20, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #56 அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோவில், திருக்கடிகை(சோளிங்கர்)



அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோவில், திருக்கடிகை(சோளிங்கர்) பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

சோளிங்கர் அரக்கோணத்திலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. போரூர்,காஞ்சிபுரம் வழியாகவும் செல்லலாம்.


மூலவர் : யோக நரசிம்மர் அக்காரக்கனி ,வீற்றிருந்த திருக்கோலம்
தாயார் : அம்ருதவல்லி
உற்சவர் : தக்கான்
தீர்த்தம் : அம்ருத தீர்த்தம்
விமானம் : சிம்ஹ விமானம்
தற்போதைய பெயர் : வெள்ளியங்குடி

அஹோபில மலை தான் மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த இடம்.மீண்டும் ஒரு முறை முனிவர்களுக்காக இந்த அவதாரம் மேற்கொண்டார்.ஒரு கடிகை(24 நிமிடம்) இங்கு

தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர் வந்தது. கடிகை-நாழிகை அசலம் - மலை ,எனவே கடிகாசலமானது. சுமார் 500 அடி உயரமுள்ள

கடிகாசல மலை மீது மூலவரும், அதனருகில் உள்ள சின்ன மலையில் சங்கு சக்கரங்களுடன் இலங்கும்,ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர். தொட்டாச்சாரியார் ,எறும்பியப்பா வாழ்ந்த புனித

தலமிது.பேயழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாச்னம் செய்த ஸ்தலம்.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோவில், திருக்கடிகை(சோளிங்கர்)

5 Comments:

வடுவூர் குமார் said...

போன வாரம் தான் போகலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தோம்.
இந்த ஆடியோவை கேட்ட பிறகு போய்வரலாம் என்று தோனுகிறது,பார்ப்போம்.

ஜீவி said...

தொடரட்டும் தங்கள் திருப்பணி.
இந்த மாதிரி புனிதங்களை எழுதத் தொடங்கிவிட்டாலே போதும்; அதுபாட்டுக்க தனது தொடர்ச்சியை
தானே பார்த்துக்கொள்ளும்.
வாழ்த்துக்கள்

R.DEVARAJAN said...

Velliyangudi is near kumbakonam.
Sholingar is da present name.
R.DEVARAJAN

R.DEVARAJAN said...

மங்களாசாஸனம் என இருத்தல் வேண்டும்.
R.Devarajan

Play Poker said...

Charming idea