அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோவில்,திரிசூலம்,சென்னை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
பழமையான சோழர்கால பெருங்கோயில்களில் திரிசூலநாதர் கோயிலும் ஒன்று.மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு எதிரில் திரிசூலம் ரயில்நிலையம்.ரயில்நிலையத்தில் இறங்கி இடதுபக்கமாகச்
செல்லும் மலைப்பாதையில் ஒரு கி.மி. நடந்தால் நான்கு மலைகளுக்கு நடுவில் திரிசூலநாதர் திருக்கோவில் தென்படும்.
இறைவன்: திரிசூலநாதர்
இறைவி : திரிபுரசுந்தரி
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 9
திரிசூலநாதர் ஆலய நுழைவாயிலில் ராஜகோபுரம் கிடையாது.முதலில் தென்படுவது நீண்ட கொடிமரம்,அடுத்து பலிபீடம்.உள்மண்டபத்தில் வலம் வரும் போது முதலில் தெற்கு பிரகாரத்தில் சீறும்
பாம்பை பூணுலாக அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரி நாக யக்ஞோபவீத கணபதி.அடுத்து தென்முகக் கடவுளான தட்சினாமூர்த்தி தரிசனம்.மேற்குப்பிரகாரம் ப்க்கம் திரும்பினால்,நின்ற நிலையில்
ஸ்ரீநிவாசப்பெருமாள்!ஈசன் கருவறைக்குப் பின்னால் லிங்கோத்பவர்.எதிரே வடக்குப் பார்த்த ஆறுமுகப்பெருமாள்,மார்க்கண்டேயர்,சிவகாமி அம்மையுடன்
ஸ்ரீநடராஜப்பெருமான்,பிரம்மா,சண்டிகேஸ்வரர் ம்ற்றும் விஷ்ணு துர்கையின் விஷேச தரிசனம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 23விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோவில்,திரிசூலம்,சென்னை
0 Comments:
Post a Comment