அருள்மிகு விண்ணகரப்பெருமாள் திருக்கோவில், நாதன்கோவில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
நாதன்கோவில் கும்பகோணத்திலிருந்து 3 மைல் தொலைவில் உள்ளது. இங்கு தங்கும் வசதிகள் இல்லை. கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்து 11/2 மைல் நடந்தும் இத்தலத்தை அடையலாம்.
மூலவர் : விண்ணகரப் பெருமாள்,யோக ஸ்ரீநிவாசன்
தாயார் : செண்பகவல்லி
உற்சவர் : ஜெகந்நாதன்
தீர்த்தம் : நந்தி தீர்த்த புஷ்கரிணி
விமானம் : மந்தார விமானம்
தற்போதைய பெயர் : நாதன்கோவில் (திருநந்திபுர விண்ணகரம்)
மஹாவிஷ்ணுவின் திருமார்பில் தான் வாசம் செய்ய வேண்டும் என தேவி திருப்பாற்கடலிலிருந்து புறப்பட்டு,செண்பகாரண்யம் என்னும் இந்த இடத்தில் கடுந்தவம் செய்ய, ஐப்பசி மாதம் சுக்கில பட்ச வெள்ளிக்கிழமையன்று தேவிக்கு தரிசனம் தந்து தன்னுடைய நெஞ்சில் ஏற்றுக் கொண்டார்.மன்னார்குடியிலிருந்து நாதன் கோவில் வரை உள்ள பகுதியை செண்பகாரண்யம் என்று அழைப்பர்.இந்த ஊர் காளமேகப் புலவரின் பிறப்பிடம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 41 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு விண்ணகரப்பெருமாள் திருக்கோவில், நாதன்கோவில்
2 Comments:
அன்பு நண்பரே !
வணக்கம். தங்களது blog மிக அருமையாக உள்ளது. அழகிய கற்பனை வளம்.
இடையிடையே சிதிலமடைந்த , தொன்மையான ஆலயங்கள் குறித்தும்
தெரிவிக்கலாம். திருவிடை மருதூர் அருகில் "திருலோக்கி" எனும் சிதிலமடைந்த ஆலயம் ஒன்று உள்ளது. சோழ வம்சத்தின் மகளிரால் கட்டப்பட்டது என்று
தெரிகிறது. அது போன்ற ஆலயங்களை வெளிச்சத்திற்குக் கொணரலாம்.
பணிவுடன்,
R.தேவராஜன்
திரு.நடராஜ் அவர்களுக்கு,
வணக்கம். "குமுதம் ஜோதிடம்" ஆசிரியர் திரு. A M R அவர்களைத் தொடர்பு கொண்டால் தமிழக ஆலயங்கள் குறித்த தகவல்கள் அனைத்தையும் பெறலாம்.
தாங்கள் ஒரு இணைய தளத்தையே தொடங்கலாம். பொலிக!! பொலிக!!
பணிவுடன்,
R.தேவராஜன்
Post a Comment