Sunday, April 13, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #55 அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோவில், திருக்கரம்பனூர



அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோவில், திருக்கரம்பனூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவில் திருச்சியிலிருந்து வடக்கே 5 மைல் தொலைவில் உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் உள்ளது


மூலவர் : புருஷோத்தமன் ,புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : பூர்ணவல்லி
தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்
விமானம் : உத்யோக விமானம்
தற்போதைய பெயர் : கரம்பனூர் (உத்தமர் கோவில்)

மும்மூர்த்திகளும் ஒரே கோவிலுள் எழுந்தருளியுள்ளதால் இது த்ரிமூர்த்தி தலம் ஆகும்.பிச்சையெடுத்து வந்த நிலையில் தனது பாத்திரம்(கபாலம்) நிறைந்த்தால் பிட்சாடன மூர்த்தியாக சிவன் எழுந்தருளியுள்ளார்.எனவே பிட்சாண்டார் கோவில் என்று ம்றுபெயரும் உண்டு.இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் பிரம்மனுக்கு உள்ள கோயிலில் சரஸ்வதி தேவி எழுந்தருளியுள்ளார்.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 25 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோவில், திருக்கரம்பனூர்

1 Comment:

வடுவூர் குமார் said...

இங்கு போனதாக ஞாபகம்.
தலப்புராணம் உங்களால் ஞாபகத்துக்கு வந்தது.