Sunday, December 23, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #39 - அருள்மிகு தாலபுரீஸ்வரர் ஆலயம், திருப்பனங்காடு




அருள்மிகு தாலபுரீஸ்வரர் ஆலயம், திருப்பனங்காடு பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

காஞ்சிபுரத்திலிருந்து பெருங்காட்டூர் செல்லும் பேருந்து வழியில் உள்ளது.ஊர் வரையில் பேருந்து வசதியில்லை.திருப்பனங்காடு கூட்டு சாலையில் இரங்கி உள் செல்ல வேண்டும்.

இறைவன் : தாலபுரீஸ்வரர்,கிருபாநாதேஸ்வரர்
இறைவி : அமிர்த்தவல்லி,கிருபாநாயகி
தலமரம் : பனைமரம்
தீர்த்தம் : சடாகங்கை
பதிகம் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
தற்போதைய பெயர் : திருப்பனங்காடு (பனங்காட்டூர்)

தரிசன நேரம் : காலை 7 மணி 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை

பூசைக்காலங்கள்: காலை சந்தி-காலை 8 மணி;உச்சிகாலம் 11-12, சாயங்காலபூசை - மாலை 5 மணி.

இறைவன் அடியாராய் மாறி சுந்தரர் மற்றும் தொண்டர்களுக்கு இத்தலத்தின் வழியே செல்லும் போது உணவு அளித்து,பருக நீர் அளித்து பசி மயக்கத்தை போக்குகிறார்.நீர் எவ்வூர் என சுந்தரர் கேட்டதற்கு

"நான் பனங்காட்டிற்கும் வெம்பாக்கத்திற்குமாய் இருப்பவன்" எனக்கூறியதால்
"வன் பார்த்தான் பனங்காடு" எனப் பெயர் ஏற்பட்டது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 53 விநாடி



எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




டவுன்லோட் அருள்மிகு தாலபுரீஸ்வரர் ஆலயம், திருப்பனங்காடு




0 Comments: