Sunday, June 22, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #65 அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை

அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி தொலைவில் உள்ளது.

தற்போதய பெயர் : வடகுரங்காடுதுறை
இறைவன் : தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர்
இறைவி : ஜடா மகுட நாயகி
தலமரம் : தென்னை
தீர்த்தம் : வாலிதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்

தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.

வாலியும்,சுக்ரீவனும் வழிப்பட்ட இரண்டு சிவஸ்தலங்கள் குரங்காடுதுறை என்ற பெயரில் இருக்கின்றன. திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் உள்ளதால் இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது.போரில் தனது அறுந்த வாலை இத்தலத்து இறைவனை வழிப்பட்டு மீண்டும் வால் வளரும் பேறு பெற்றான்.கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோபுரத்தில் வாலி இறைவனை வழிப்படும் சிற்பமும் ,ஈசன் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை

0 Comments: