Sunday, March 8, 2009

அருள்மிகு ஐராவதேஸ்வரர் ஆலயம், அத்திமுகம்

அருள்மிகு ஐராவதேஸ்வரர் ஆலயம், அத்திமுகம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

ஓசூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரம் , ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கி.மீ பயணித்தபின் இடப்பக்கம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தூரம் செல்ல வேண்டும்.


தற்போதய பெயர் : அத்திமுகம் ( பழைய பெயர் : ஹஸ்தி முகம்)

இறைவன் : ஐராவதேஸ்வரர் , அழகேஸ்வரர்

இறைவி : காமாட்சி அம்பாள் , அகிலாண்டவல்லி அம்பாள்

தலமரம் : வன்னி

தரிசன நேரம்
: காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 7.30 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.

பசுமை பொங்கும் அழகிய கிராமமான அத்திமுகத்தில் தேவர் தலைவனான இந்திரன் தனது வாகனமான ஐராவதத்தில் வந்து இங்கு இறைவனை வழிபட்டதால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என பெயர் வழங்கலாயிற்று. எனினும் இங்கு மூலவராக அமர்ந்திருப்பவர் அருள்மிகு அகிலாண்டவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ அழகேஸ்வரர் .

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :


ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



டவுன்லோட் அருள்மிகு ஐராவதேஸ்வரர் ஆலயம், அத்திமுகம்

1 Comment:

Thirumal said...

இந்தக் கோவிலுக்குச் சென்றேன்.
அமைதியான, பேரழகான கோயில்.

அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.