அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோவில், திருமீயச்சூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் திருமீயச்சூர் உள்ளது.
இறைவன்: அருணேஸ்வரர்
இறைவி: லலிதாம்பிகை, சாந்தநாயகி
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம்
தற்போதைய பெயர் : மீயச்சூர்
காசிப முனிவரின் மகனான அருணனை வஞ்சித்த சூரியன் ,தனது சாபம் தீருவதற்காக மீயச்சூர் வந்து இறைவனை வழிபட்டான். வெகுகாலம் ஆகியும் தனது சாபம் தீராததால் வருத்தத்துடன் " ஹே மிகுரா" என கதறிய போது ஏகாங்தத்தில் இருந்த தேவி கோபமுற , இறைவன் சாந்தப்படுத்துகிறார். சாந்தமடைந்த அன்னை பராசக்தியின் வாயிலிருந்து வசினி என்ற வாக்தேவதைகள் தோன்றி திருவாய் மலர்ந்தருளியதே லலிதா சகஸ்ரநாமம் ஆகும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 24, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #74 அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோவில், திருமீயச்சூர் |
Sunday, August 17, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #73 அருள்மிகு கோமதி அம்மன் திருக்கோவில், சங்கரன் கோவில் |
அருள்மிகு கோமதி அம்மன் திருக்கோவில், சங்கரன் கோவில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தென்காசி-விருதுநகர் ரயில் பாதை வழியாகவோ ,சாலை வழியில் ராஜபாளையத்திலிருந்து 32 கிமி,திருநெல்வேலியிலிருந்து 40 கிமி தொலைவில் பயணித்து இத்திருத்தலத்தை அடையலாம்.
இறைவன்: சங்கரலிங்கேஸ்வரர், சங்கரநாராயணர்
இறைவி: கோமதி அம்மன்
தீர்த்தம் : நாகசுனை
தலமரம் : புன்னை
தற்போதைய பெயர் : சங்கரன் கோவில்
சிவ , விஷ்ணு பேதமின்றி நாராயணனும் தம்முள் அடக்கம் என்பதை சிவன் பாதி ,நாராயணன் பாதியாக தமது வாம பாகத்தில் நாராயணனைக் காட்டி அற்புதக் காட்சி கொடுத்த திருத்தலம் சங்கரன் கோவில். கோமதியம்மன் தவம் இருந்து சங்கர நாராயணர் திருவுருவத்தை இத்தலத்தில் தரிசித்தார். இதை நினைவு கூறும் வகையில் ஆணுதோறும் இந்த ஆலயத்தில் ஆடித்தபசு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஜெயந்தன் மற்றும் ஸ்தல புராணத்தைக் கேட்க ஆடியோவைக் கேட்கவும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு கோமதி அம்மன் திருக்கோவில், சங்கரன் கோவில்
Monday, August 11, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #72 அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம் |
அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணதிற்குத் தென்மேற்கில் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் பட்டீஸ்வரம் இருக்கிறது.
இறைவன்: பட்டீஸ்வரன்,தேனுபுரீஸ்வரர்
இறைவி: ஞானாம்பிகை
தீர்த்தம் : கோடி தீர்த்தம்
தற்போதைய பெயர் : பட்டீஸ்வரம் (பழையாறை)
இராவணனைக் கொன்றதால் இராமபிரானுக்கு மூன்று தோஷங்கள் ஏற்படுகின்றன். அதில் மூன்றாவது தோஷமான சாயஹத்தி தோஷத்தை போக்குவதற்காக பட்டீஸ்வரத்தில் சிவலிங்கத்தை (இராம லிங்கம்) பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மேலும் தேவி பராசக்தி தனித்து தவமிருந்தபோது காமதேனு தனது புத்திரி பட்டியை தேவிக்கு உதவியாக அனுப்பியிருந்தது. பட்டி சிவலிங்கத்தை தூய்மையான பாலால் நீராட்டி வழிபட்டது. பட்டி வழிபட்டதால் இறைவன் பட்டீஸ்வரன் என்றும் ,தலம் பட்டீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. மேலும் திருஞானசம்பந்தரின் முத்துப் பந்தல் குறித்து கேட்க ஆடியோவைக் கேட்கவும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 3, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #71 அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் ஆலயம், திருப்பூந்துருத்தி |
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் ஆலயம், திருப்பூந்துருத்தி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
தஞ்சை மாவட்டத்தில், தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் திருக்கண்டியூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருப்பூந்துருத்தி திருத்தலம்.
தற்போதய பெயர் : பூந்துருத்தி
இறைவன் : புஷ்பவவேஸ்வரர்
இறைவி : சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்,திருநாவுக்கரசு சுவாமிகள்
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
இரு ஆற்றங்கரைக்கு நடுவில் உள்ள ஊர்களை துருத்தி என அழைப்பர். இந்திரன் தனது சாபம் நீங்குவதற்காக காவிரி நதிக்கும் , அதன் கிளை ஆறான குடமுருட்டிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் புஷ்பவனம் அமைத்து சிவபெருமானை வழிபட்டதால் இறைவனுக்கு புஷ்பவனேஸ்வரர் என்றும் ,இத்தலம் பூந்துருத்தி எனவும் வழங்கலாயிற்று. இத்தலத்தில் மூன்று நந்திதேவர்களும் சந்நிதியை விட்டு விலகியிருக்கும் காரணத்தையும்,சம்பந்தர் மேட்டின் வரலாற்றையும் அறிய பாட்காஸ்டை கேளுங்கள்
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் ஆலயம், திருப்பூந்துருத்தி
Sunday, July 27, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #70 அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில் ,குடவாயில் |
அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில் ,குடவாயில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருவாரூர் மாவட்டத்தில் ,திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கொடைவாசல் திருத்தலம் உள்ளது.
தற்போதய பெயர் : கொடைவாசல் (குடவாயில்)
இறைவன் : கோணேஸ்வரர்
இறைவி : பெரிய நாயகி
தலமரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த்த தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:00 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
பிரளயகாலத்தில் நிலமெல்லாம் கடல் சூழ்ந்தபோது ,ஒரு குடத்தில் வேதங்களை வைத்து சிவலிங்கத்தால் குடத்தின் வாயிலை அடைத்து பாதுகாக்கப்பட்டது. ஆனால் பெருவெள்ளத்தால் குடம் குமபகோணத்தையடுத்துள்ள குடமூக்கு என்ற பகுதியில் ஒதுங்கிவிட்டது. பின்னர் இறைவனின் திருஉள்ளப்படி அந்தக் குடம் மூன்றாக உடைந்து அடிப்பாகம் கும்பகோணத்திலும் ,நடுப்பாகம் திருக்கலயநல்லூரிலும், வாய்ப்பாகம் குடவாயிலிலும் விழுந்தன.
குடவாயில் செங்கணான் ,கருடன் வணங்கிய புராணங்களுக்கு ஆடியோவைக் கேட்கவும்
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 20, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #69 அருள்மிகு கஜசம்ஹாரமூர்த்தி ஆலயம், வழுவூர் |
அருள்மிகு கஜசம்ஹாரமூர்த்தி ஆலயம், வழுவூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் சாலையில் ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வழுவூர்.
தற்போதய பெயர் : வழுவூர்
இறைவன் : கஜசம்ஹாரமூர்த்தி ,கிருத்திவாசேஸ்வரர்
இறைவி : பாலகுசாம்பிகை
தலமரம் : தாருகை
தீர்த்தம் : ஈசான தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:00 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
பிரளயகாலத்தில் நிலமெல்லாம் கடல் சூழ்ந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் வழுவின காரணத்தால் வழுவூர் ,வழுவை எனப் பெயர் ஏற்பட்டதாகப் புராணம் தெரிவிக்கிறது. அட்ட வீராட்டத் தலங்களில் கஜமுகாசுரனைக் கொன்றத் தலம் வழுவூர். நடன சபைகளில் ஞான சபையாகப் போற்றப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 13, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #68 அருள்மிகு வேங்கைநாதர் திருக்கோவில், திருவேங்கைவாசல் |
அருள்மிகு வேங்கைநாதர் திருக்கோவில், திருவேங்கைவாசல் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
புதுக்கோட்டையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இத்திருத்தலம். திருக்கோகர்ணத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
இறைவன்: வேங்கைநாதர் ,வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி: பிரகதாம்பாள்,பெரியநாயகி
தலமரம் : வகுளம்
தற்போதைய பெயர் : வேங்கைவாசல் (வகுளாரண்யம்)
வேங்கை உருவில் வந்த இறைவன் ,காமதேனுவைத் தடுத்தாட்கொண்ட இடம் தான் திருவேங்கைவாசல் திருத்தலம். அன்னை பிரகதாம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன. சிற்பி சிலையை உருவாக்கியபோது தேவியின் வலது கட்டைவிரலில் ஒரு பகுதி தட்டையாக அமைந்துவிட்டதால் குளத்தில் வீசிவிட்டு வேறொரு சிலை செய்து பிரதிஷ்டை செய்தனர். பின்னர் தேவியின் அருளால் குளத்தில் வீசப்பட்ட சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு வேங்கைநாதர் திருக்கோவில், திருவேங்கைவாசல்