Sunday, July 20, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #69 அருள்மிகு கஜசம்ஹாரமூர்த்தி ஆலயம், வழுவூர்



அருள்மிகு கஜசம்ஹாரமூர்த்தி ஆலயம், வழுவூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் சாலையில் ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வழுவூர்.

தற்போதய பெயர் : வழுவூர்
இறைவன் : கஜசம்ஹாரமூர்த்தி ,கிருத்திவாசேஸ்வரர்
இறைவி : பாலகுசாம்பிகை
தலமரம் : தாருகை
தீர்த்தம் : ஈசான தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்

தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:00 மணிமுதல் 8 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.


பிரளயகாலத்தில் நிலமெல்லாம் கடல் சூழ்ந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் வழுவின காரணத்தால் வழுவூர் ,வழுவை எனப் பெயர் ஏற்பட்டதாகப் புராணம் தெரிவிக்கிறது. அட்ட வீராட்டத் தலங்களில் கஜமுகாசுரனைக் கொன்றத் தலம் வழுவூர். நடன சபைகளில் ஞான சபையாகப் போற்றப்படுகிறது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு கஜசம்ஹாரமூர்த்தி ஆலயம், வழுவூர்

1 Comment:

Anonymous said...

இந்தக் கோயிலில் ஒரு காலத்தில், அண்மையில் ஆறுகால பூஜை நடந்து கொண்டிருந்தது. இந்தக் கோயிலின் சொத்து நிறைய இருந்தது. ஆனால், அந்தச் சொத்து நிலங்களை ஒரு சாரார் குத்தகைக்கு எடுத்து, காலப்போக்கில் அரசியல் தலையீட்டினால் அந்தச் சொத்துக்கள் யாவும் குத்தகை எடுத்த அவரவருக்கே சொந்தமானதால் கோவில் சொத்துக்கள் யாவும் திவாலாகிவிட்டன. இதைத் தட்டிக்கேட்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அறநிலையத்தாரும் இதைக் கண்டு கொள்ளவில்லை. மேலும் இந்த ஊரில் அக்ரஹாரம் (சன்னதித் தெரு) ஒருகாலத்தில் அந்தணர்கள் மட்டுமே வசிக்கப்பெற்று மிகப் புனிதமாக இருந்தது. ஆனால், அந்தணர்கள் யாவரும் வறுமையின் காரணமாக தங்கள் வீடுகளை பிராமணர் அல்லாத பலருக்கு விற்றுவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். அவர்களது அடுத்த சந்ததியினரும் இதுபற்றி அக்கரை எடுக்காததும் இதற்கொரு காரணம். சிவன் சொத்து குல நாசம் என்று ஒரு பழமொழியுண்டு. அந்தப் பழமொழி தி.மு.க. விஷையத்தில் பரிபூரணமாக இன்று நிரூபிக்கப் பட்டுள்ளதை நாம் எல்லோரும் அறிவோம். இந்த ஊர் என்னை ஆளாக்கிய ஊர் என்பதால் ஓர் ஆதங்கத்தில் இதை எழுதினேன். தமிழ்நாடு அரசாங்கம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அரசியல் என்பது வேறு, ஆன்மீகம் என்பது வேறு. அரசியலை ஆன்மீகத்தில் நுழைத்தால் அது என்றுமே விளங்கவே விளங்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும், ஆன்மீக வாதிகளும் ஆன்மீகத்தை மட்டும் கடைபிடிக்க வேண்டும். அவர்களும், அரசியலில் தலையிடக்கூடாது. ஆனால், சில ஆன்மீக வாதிகள் பசுவதை(cow slaughters) போன்றவற்றை அரசாங்கம் கண்டு கொள்ளாதபோது (ஏனென்றால் தோல் ஏற்றுமதி என்பது நமக்கு ஏராளமான அன்னியச் செலாவணியை நம் நாட்டுக்கு ஈட்டுக்கொடுப்பதால், நாட்டின் நலன் கருதி)அதற்கு ஆன்மீக வாதிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால் ஆன்மீகமும், அரசியலும் சமநிலையில் செயல்பட்டிருக்கும், மேலும் இன்று வந்திருக்கும் அவலநிலையையும் பெருமளவுக்குத் தடுத்திருக்கலாம்.