Sunday, August 3, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #71 அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் ஆலயம், திருப்பூந்துருத்தி



அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் ஆலயம், திருப்பூந்துருத்தி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

தஞ்சை மாவட்டத்தில், தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் திருக்கண்டியூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருப்பூந்துருத்தி திருத்தலம்.

தற்போதய பெயர் : பூந்துருத்தி
இறைவன் : புஷ்பவவேஸ்வரர்
இறைவி : சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்,திருநாவுக்கரசு சுவாமிகள்

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.


இரு ஆற்றங்கரைக்கு நடுவில் உள்ள ஊர்களை துருத்தி என அழைப்பர். இந்திரன் தனது சாபம் நீங்குவதற்காக காவிரி நதிக்கும் , அதன் கிளை ஆறான குடமுருட்டிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் புஷ்பவனம் அமைத்து சிவபெருமானை வழிபட்டதால் இறைவனுக்கு புஷ்பவனேஸ்வரர் என்றும் ,இத்தலம் பூந்துருத்தி எனவும் வழங்கலாயிற்று. இத்தலத்தில் மூன்று நந்திதேவர்களும் சந்நிதியை விட்டு விலகியிருக்கும் காரணத்தையும்,சம்பந்தர் மேட்டின் வரலாற்றையும் அறிய பாட்காஸ்டை கேளுங்கள்

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் ஆலயம், திருப்பூந்துருத்தி

0 Comments: