Sunday, July 27, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #70 அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில் ,குடவாயில்



அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில் ,குடவாயில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

திருவாரூர் மாவட்டத்தில் ,திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கொடைவாசல் திருத்தலம் உள்ளது.

தற்போதய பெயர் : கொடைவாசல் (குடவாயில்)
இறைவன் : கோணேஸ்வரர்
இறைவி : பெரிய நாயகி
தலமரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த்த தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்

தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:00 மணிமுதல் 8 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.


பிரளயகாலத்தில் நிலமெல்லாம் கடல் சூழ்ந்தபோது ,ஒரு குடத்தில் வேதங்களை வைத்து சிவலிங்கத்தால் குடத்தின் வாயிலை அடைத்து பாதுகாக்கப்பட்டது. ஆனால் பெருவெள்ளத்தால் குடம் குமபகோணத்தையடுத்துள்ள குடமூக்கு என்ற பகுதியில் ஒதுங்கிவிட்டது. பின்னர் இறைவனின் திருஉள்ளப்படி அந்தக் குடம் மூன்றாக உடைந்து அடிப்பாகம் கும்பகோணத்திலும் ,நடுப்பாகம் திருக்கலயநல்லூரிலும், வாய்ப்பாகம் குடவாயிலிலும் விழுந்தன.
குடவாயில் செங்கணான் ,கருடன் வணங்கிய புராணங்களுக்கு ஆடியோவைக் கேட்கவும்

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி


எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில் ,குடவாயில்

0 Comments: