Sunday, September 21, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #78 அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோவில், அரித்துவாரமங்கலம்



அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோவில், அரித்துவாரமங்கலம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com

கும்பகோணத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இத்திருத்தலம். தஞ்சாவூர் , கும்பகோணத்திலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உண்டு.

இறைவன்: பாதாளேஸ்வரர் (பாதாள வரதர்)
இறைவி: அலங்கார அம்மை
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தலமரம் : வன்னி
தற்போதைய பெயர் : அரித்துவாரமங்கலம் (திரு அரதை பெரும்பாழி)
பதிகம் : திருஞான சம்பந்தர்

பஞ்சாரண்யத் தலங்களில் மூன்றாவதாக தரிசிக்க வேண்டியது திரு அரதை பெரும்பாழி என்கிற அரித்துவாரமங்கலம் . உச்சி நேரமாகிய 11.00 முதல் 12.30 மணிக்குள் அரித்துவாரமங்கலத்தில் கோயில் கொண்டிருக்கும் அலங்கார அம்மை சமேத பாதாளேஸ்வரரை தரிசிக்க வேண்டும். திருமாலுக்கும் பிரம்மாவிற்கும் யார் பெரியவர் என்று நடந்த போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து இறைவனின் அடி காண குடைந்து சென்ற இடம் இத்தலம் என்கிறார்கள். இறைவன் கருவறையில் சிவலிங்கத்திற்கு முன் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. அப்பள்ளத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள். பாழி என்றால் பள்ளம். இதனால் இத்தலத்திற்கு திரு அரதை பெரும்பாழி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோவில், அரித்துவாரமங்கலம்

0 Comments: