Monday, September 1, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #75 அருள்மிகு அபயாம்பிகை ஆலயம், மயிலாடுதுறை



அருள்மிகு அபயாம்பிகை ஆலயம், மயிலாடுதுறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

மயிலாடுதுறை நகரின் மத்தியில் மாயூரநாதசுவாமி- அபயாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.

தற்போதய பெயர் : மயிலாடுதுறை
இறைவன் : மாயூரநாதசுவாமி
இறைவி : அபயாம்பிகை
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்

தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.

அம்பிகை மயில் உருவத்தில் இறைவனைப் பூஜீத்து திருமணம் செய்து கொண்ட ஸ்தலமாதலால் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது. ஐப்பசி மாதத் திருவிழாவின் போது அம்பிகை மயில் உருவமாக வழிப்பட்ட ஐதீக விழா நடைபெறுகிறது. துலா ஸ்னானத்திற்கு புகழ்ப்பெற்றது மயிலாடுதுறை . ஐப்பசி மாதத்து அமாவாசையன்று (தீபாவளி) கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் மயிலாடுதுறையில் காவிரியின் இடப தீர்த்தத்தில் நீராடியதாக ஐதீகம்! இதனால் தீபாவளியன்று காவிரி நீரில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு அபயாம்பிகை ஆலயம், மயிலாடுதுறை

1 Comment:

mother's grace said...

very very happy sri nataraj,
i am regularly reading your varam oru aalayam articles in nampikkai.last time i read about maruntheeswarar and i happenend to be there.sorry for not writing in tamil.best wishes.