Sunday, June 29, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #66 அருள்மிகு வீழிநாதர் திருக்கோவில், திருவீழிமிழலை



அருள்மிகு வீழிநாதர் திருக்கோவில், திருவீழிமிழலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

திருவாரூர் மாவட்டத்தில் கொடவாசல் வட்டத்தில் பூந்தோட்டம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே பத்து கிலோமிட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.

இறைவன்: வீழிநாதர், மாப்பிள்ளை சுவாமி
இறைவி: சுந்தர குஜாம்பிகை
தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம்
தலமரம் : பலா
தற்போதைய பெயர் : வீழிமிழலை

இறைவி தவம் இருந்து இறைவனை திருமணம் புரிந்து கொண்ட ஸ்தலம் என்பதால் ,திருமணம் ஆக வேண்டிய பெண்கள் கல்யாண சுந்தரரை வழிப்பட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தலத்து இறைவனை பிரம்மன் வழிப்பட்டு படைக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றான். திருமால் சிவபெருமானிடமிருந்து ஜலந்திரனை அழிக்க உபயோகித்த சக்கரப்படையைப் பெறுவதற்க்காக இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி ஆயிரம் தாமரை மலர்களால் தினமும் பூஜித்து வந்தார். ஒருநாள் ஒரு மலர் குறைந்து காணப்பட்டது. பூஜை தடைபடாமல் இருக்க,உடனே தனது வலது கண்ணை இறைவன் திருவடியில் சமர்ப்பித்தார். திருமால் கண்மலர் சாத்தி வழிப்பட்ட இடம் தான் திருவீழிமிழலை.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 26 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு வீழிநாதர் திருக்கோவில், திருவீழிமிழலை

1 Comment:

AALAYAM THOZHUVOM said...

very excellent narration & a very good service, thanks a lot