அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் உள்ளது திருஅவளிவநல்லூர். தஞ்சாவூர் நீடாமங்கலம் இருப்புப் பாதையில் உள்ள அம்மாபேட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருஅவளிவ நல்லூர்.
இறைவன்: பாதிரிவனேஸ்வரர்,சாட்சிநாதர்,தம்பரிசுடையார்
இறைவி: சவுந்தர்ய நாயகி
தீர்த்தம் : சிவபுஷ்கரணி
தலமரம் : பாதிரி மரம்
தற்போதைய பெயர் : திருஅவளிவநல்லூர் (பாதிரி வனம்,புல்லாரண்யம்)
பஞ்சாரண்யத் தலங்களில் இரண்டாவதாகத் தரிசிக்க வேண்டியது திருஅவளிவநல்லூர். காலை சந்தி நேரமாகிய 8.30 முதல் 9.30 மணிக்குள் திருஅவளிவநல்லூரில் கோயில் கொண்டிருக்கும் சவுந்தர்ய நாயகி சமேத பாதிரிவனேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும்.மூலவர் சிவலிங்கத்தோடு இறைவனும் உமையம்மையும் காட்சிக் கொடுக்கும் அமைப்பை ஒரு சில சிவாலயங்களில் மட்டுமே காண முடியும். தை அமாவாசையன்று பாதிரிவனேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் சிவபுஷ்கரிணியில் தீர்த்தம் அருளும்போது பக்தர்களும் புனித நீராடி மகிழ்வது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர்
0 Comments:
Post a Comment