அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் கொரடாசேரிக்கு அருகில் உள்ளது திருக்கொள்ளம்புதூர் .கும்பகோணம் - கொரடாசேரி பேருந்து பாதையில் செல்லூரில் இறங்கியும் இத்தலத்திற்கு செல்லலாம்.
இறைவன்: வில்வவனநாதர்
இறைவி: அழகிய நாச்சியர்
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் ,அர்ச்சுன தீர்த்தம்
தலமரம் : வில்வம்
தற்போதைய பெயர் : கொள்ளம்புதூர்
பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தபோது , கௌமிய முனிவரின் அறிவுரைப்படி அர்ச்சுனன் இத்தலத்து இறைவனை வணங்கி வழிப்பட்டு பசுபதாஸ்திரம் பெற்றான். பல சிவாலயங்களை தரிசித்துக் கொண்டு திருக்கொள்ளம்புதூருக்கு வந்த போது திருஞானசம்பந்தர் , வெள்ளத்தின் காரணமாக ஓடக்காரர்கள் இல்லாமல்,துடுப்பு இல்லாமல் ஓடத்தில் அமர்ந்து "கொட்டமே கமழும்" என்ற பதிகத்தைப்பாடி அக்கரை வந்து சேர்ந்து இறைவனை தரிசித்தார்.இதனால் முள்ளியாற்றுக்கு இப்பகுதியில் "ஓடம் போக்கி ஆறு" என்ற பெயர் ஏற்பட்டது
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர்
0 Comments:
Post a Comment