Sunday, March 30, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #53 அருள்மிகு கோலவில்லிராமன் திருக்கோவில், திருவெள்ளியங்குடி



அருள்மிகு கோலவில்லிராமன் திருக்கோவில், திருவெள்ளியங்குடி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

வெள்ளியங்குடி கும்பகோணத்திலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. இங்கு தங்கும் வசதிகள் இல்லை. கும்பகோணத்திலிருந்தோ அல்லது ஆடுதுறையிலிருந்தோ தங்கியிருந்து இத்தலம் வந்து செல்லலாம்.


மூலவர் : கோலவில்லிராமன்
தாயார் : மரகதவல்லி
உற்சவர் : சிருங்கார சுந்தரன்
தீர்த்தம் : சுக்ர தீர்த்தம்
விமானம் : புஷ்கலா வர்த்தக விமானம்
தற்போதைய பெயர் : வெள்ளியங்குடி

மஹாவிஷ்ணு வாமன அவதாரம் கொண்டு மாவலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க ,அசுர குல குருவான சுக்ர பகவான் ,மன்னனை காப்பாற்ற தாரை வார்க்கும் செப்புக் குடத்தை ஒரு பூச்சியாக உருவெடுத்து அடைக்க ,பெருமாள் ஒரு சிறு குச்சியால் துவாரம் வழியாக குத்த,ஒரு கண்ணிழந்து ஒற்றை கண்ணன் ஆகிறான் சுக்கிரன்.இழந்த நேத்திரத்தை சுக்கிரன் இவ்விடத்து தவமிருந்து பெற்றதால் இவ்ர் பெயராலேயே வெள்ளியங்குடியென அழைக்கப்படுகிறது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு கோலவில்லிராமன் திருக்கோவில், திருவெள்ளியங்குடி

0 Comments: