Sunday, March 16, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #51அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில், திருவெள்ளறை



அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில், திருவெள்ளறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

திருவெள்ளறை திருச்சியிலிருந்து 13 மைல் தொலைவில் துறையூர் செல்லும் பாதையில் உள்ளது.


மூலவர் : புண்டரீகாட்சன் ,நின்ற திருக்கோலம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : செண்பக வல்லி , பங்கயச் செல்வி
உற்சவர் : பங்கயச் செல்வி
தீர்த்தம் : 7 தீர்த்தங்கள்
விமானம் : விமலாக்ருத விமானம்
தற்போதைய பெயர் : திருவெள்ளறை

ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய இதன் தொன்மையை குறிக்கவே ஆதிவெள்ளறை என இது அழைக்கப்படுகிறது.சிபிச் சக்ரவர்த்திக்கும்,மார்க்கண்டேயருக்கும் வெள்ளைப் பன்றியின் மூலமாக(வராஹ) புற்றிலிருந்து தோன்றி காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது. இத்திருக்கோவிலுக்கு அருகிலுள்ள நீலிவனம் கிராமத்தில் சிவன் தன் கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலம் நீங்குவதற்காக இப்பெருமானை வழிப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கின்றன. இராமானுஜர் சிலகாலம் வாசம் செய்த ஸ்தலம்.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில், திருவெள்ளறை

2 Comments:

வடுவூர் குமார் said...

நன்றாக இருந்தது.
நன்றி.

RAJARAMAN said...

அன்புள்ள நடராஜ்,
அடுத்த வாரம் 52 வது எபிஸோட்.
அதாவது ஒரு வருடம் பூர்த்தியாகிறது.
டெட்ராய்ட் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் சார்பில் நல் வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
நன்றி,
ராஜாராமன்.