Sunday, September 23, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #26 (ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம்(கபிஸ்தலம்))



ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.பாபநாசம் ரயில்நிலையத்திலிருந்து 3 கி.மி தொலைவில் உள்ளது.

மூலவர் : கஜேந்திரவரதர் : புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்

தாயார் : ரமாமணவல்லி(பொற்றாமறையாள் )

தீர்த்தம் : கஜேந்திரபுஷ்கரிணி ,கபிலதீர்த்தம்

விமானம் : ககநாக்ருத விமானம்

இக்கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு அமைந்துள்ள கபில தீர்த்தம் எனும் குளத்தில் ஒருநாள் கஜேந்திரன்(யானை) நீரருந்த இறங்கும் போது முதலை கவ்வ,யானை பிளிற,கருட வாகனத்தில் வந்த மகா விஷ்ணு தம் சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று யானைக்கு மோட்சமளித்ததாக வரலாறு.கஜேந்திர மோட்சம் பங்குனி மாதத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம்

2 Comments:

வடுவூர் குமார் said...

இந்த கஜேந்திர மோட்சம்,நாகை சௌந்திரராஜ பெருமாள் கோவிலில்,வைகுண்ட ஏகாதேசியில் போது திருக்குளத்தில் அலங்காரம் செய்யப்பட்ட பொம்மைகள் மூலம் காட்டப்படும்.- இது மேல் விபரம்.

R. Prabhu said...

Very Good Effort Natraj. Podcasting is a very idea too! Btw along with the Thalavalaru, it would be better if you also give details about when and by whom, the temple was built. Again a very good effort, all the best!!!