அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,திருநள்ளாறு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நள்ளாறு என்பதற்கு ஆறுகளின் மத்தியில் உள்ள பகுதி என்று பொருள்.அரிசொல் மற்றும் வாஞ்சை ஆறு எனும் இரண்டு ஆறுகள் இத்தலத்தின் தெற்கிலும் வடக்கிலும் ஓடுவதால் இத்தலத்திற்கு திருநள்ளாறு என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவார்கள்.அருள்மிகு பிராணேஸ்வரி சமேத தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் புராதனப் பெருமை வாய்ந்த ஆலயம் என்றாலும் இங்குள்ள சனீஸ்வர பகவான்
சந்நிதிதான் மிகவும் பிரசித்தமானது.
கும்பகோணத்தில் இறங்கினால் 38 கி.மி தொலைவில் உள்ளது திருநள்ளாறு.கும்பகோணம் செல்லும் பாதையில் காரைக்கால்-மயிலாடுதுறை பேருந்து தடத்தில் உள்ளது.மயிலாடுதுறையிலிருந்தும் பஸ் வசதிகள் உண்டு.
இறைவன் : தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி : பிராணேஸ்வரி
ஷேத்திர கதாநாயகர் : சனி
தானியம் : எள்
மலர் : வன்னி,கருப்பு குவளை
வஸ்திரம் :கருப்பு நிற ஆடை
ரத்தினம் : நீலம்
வாகனம் :காக்கை
தீர்த்தம் : நள தீர்த்தம்
தரிசன நேரம் : காலை 5 - 12 மாலை 4 - 9.00
ஆலயத்தின் இராஜகோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது.உள்ளே கொடிமரம்,முன் மண்டபத்தை கடந்து வந்தால் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் நந்தியும் குடி கொண்டிருக்கிறார்கள்.
ஆலயத்தின் உள்ளே முதலில் இருப்பது இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் .அடுத்தது அன்னை பிராணேஸ்வரியின் ஆலயம்.தென்புற வாசல் வழியாக வந்தால் தியாகராஜர் சந்நிதி.நீலோத்பலாம்பாள் சகித ஸ்ரி நகவிடங்க செண்பக தியாகேசர் திருவருள் புரிகிறார்.அற்புத அருள்கொண்ட மரகதலிங்கத் திருமேனியும் கவர்கிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 58 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Tuesday, September 4, 2007
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #23 (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,திருநள்ளாறு)
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
அருமை நட்ராஜ்
கோவிலுக்கு போவதற்கு முன்பு ஒரு தடவை கேட்டுவிட்டு போனால் நன்றாக இருக்கும்.
miga miga arumaiya irunthichi intha podcast nataraj.....thank u for your kind efforts....:-)
Post a Comment