அருள்மிகு நாகநாதர் ஆலயம்,திருநாகேஸ்வரம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருநாகேஸ்வரம் நவக்கிரகங்களில் ராகு பகவானின் தலம்.ஒருவரது யோகம்,பதவி,தொழில்,வளமான வாழ்வு,எதிர்ப்பை வெல்லல்,வறுமை நீங்க,கடன் தீர,சக்தீ ஆகியவற்றை தர வல்லவர் ராகு .ராகு யோகத்திற்கு அதிபதி.ராகுவையும்,கேதுவையும் முறைப்படி கிரகங்கள் என்று அழைப்பதில்லை.இவற்றை சாயா கிரகங்கள் என்று சொல்லுவார்கள்.
தலம்: கும்பகோணதிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம்.தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணதிலிருந்து கிழக்கே 5 கி.மி தொலைவில் உள்ளது
இறைவன் : நாகநாதர்,அர்த்த நாரீசர்
இறைவி : பிறையணிவாள்நுதலம்மை,கிரிகுஜாம்பிகை
ஷேத்திர பாலகர் : ராகு
வாகனம் : நீல சிங்கம்
நிறம் : கருமை
தானியம் : உளுந்து
மலர் : மந்தாரை
ரத்தினம் : கோமேதகம்
உலோகம் : கருங்கல்
தரிசன நேரம் : காலை 5 - 12 மாலை 4 - 9
அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று பன்னிரெண்டு சுவாமி புஷ்கரணிகள். சேக்கீழார் சுவாமிகளால் திருப்பணிகள் செய்யப்பெற்ற இத்தலத்திற்கு செண்பகவனம்,கிரிகன்னிகைவனம் போன்ற பெயர்களும் உண்டு.நாகமகிய ராகு வழிப்பட்டமையால் "திருநாகேஸ்வரர்" என்று திருப்பெயர் உண்டாகி நாகநாதஸ்வாமி என்றும் நிலையாகிவிட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 16 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, September 9, 2007
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #24 (அருள்மிகு நாகநாதர் ஆலயம்,திருநாகேஸ்வரம்)
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
என்ன பால் நிறம் மாறுகிறதா?
பல பல விபரங்களை தொகுத்து சொல்லியுள்ளீர்கள்.
பல முறை அப்படியே பேருந்தில் போயிருந்தாலும் ஒரு முறையாவது கோவிலுக்குள் போனதில்லை.
வருந்துகிறேன்.
ஆம் இது உண்மை. நானும் கண்டுள்ளேன். அதைப் பற்றி நினைக்கும் போதே புல்லரிக்கிறது !!
தலம் என்பது ஸ்தலமா?
கொஞ்சம் சவுண்டு அதிகமாக வைத்து கேட்க்கும் போது தெரிகிறது.
Thanx for all your responses.
Thalam and sthalam both are same.
Nataraj
This wonderful work of yours is heartwarming & very informative....thank you nataraj for your efforts...neengalum vaazhga valamudan...:-)
Post a Comment