Sunday, September 16, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #25 (அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம்)



அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

கேது ஞானத்தை கொடுக்கக் கூடியவர்.ஞானம்.மோட்சம்,புனித நீராடல்,அயல்நாட்டுப் பயணம்,கடின உழைப்பு,வைத்தியர்,தீ விபத்து,தோல் வியாதி,ஜுரம் - இப்படி பலவற்றிற்கு காரணமாக இருப்பவர் கேது.கேது பகவானின் அதிதேவதை பிரம்மா,சித்திரகுப்தன்.விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுவது,கொள்ளு தானம் செய்வது போன்றவை கேது ப்ரீத்தியாகும்.

தலம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் தர்மகுளம் என்று ஒரு சிற்றூர்.இதற்கு தெற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் நாகநாதஸ்வாமி ஆலயம்.

இறைவன் : நாகநாதஸ்வாமி

இறைவி : சௌந்தர்யநாயகி

ஷேத்திர பாலகர் : கேது

வாகனம் : கழுகு

நிறம் : சிவப்பு

தானியம் : கொள்ளு

மலர் : செவ்வரளி

ரத்தினம் : வைடூர்யம்



தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 7


ஆலயம் கிழ்க்கு நோக்கி உள்ளது.கிழ்க்கு கோபுர வாசல் முன்பு நாக்தீர்த்தம் உள்ளது.வாசுகி பாம்பு நாக்நாதஸ்வாமியை வழிபட்டு வந்தபோது அமைந்த தீர்த்தம் என்கிறார்கள்.விக்கிரம சோழன் கல்வெட்டில் இத்தலம் திருவலபுரம் எனக் குறிப்பிடப்பட்டிறிக்கிறது.இத்தலத்தின் ஸ்தல விருக்ஷ்ம் மூங்கில்.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 16 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்


எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம்

4 Comments:

Anonymous said...

Vanakam Nataraj!!!
Intha vaaramum super o super....thank you for your kind efforts...:-)

வடுவூர் குமார் said...

கேதுவைப் பற்றி பல விஷயங்களை சொல்லியுள்ளீர்கள்.
நன்றாக இருந்தது.
மிக்க நன்றி.

Unknown said...

Really super da

MADHAVI said...

DEARNATRAJ, I SEEN HEARD ABOUT SOME OF UR VAARAM ORU KOIL IT IS THE VERY GREATEST JOB U HAVE DONE AND KEEP IT UP