அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்,திங்களூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்ததாக கருதப்படுவது சந்திரன்.தேவர்களும் அசுரகளும் மந்தார மலையை மத்தாக அமைத்து வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த போது பல பொருள்கள் கிடைத்தன.அவ்வாறு கிடைத்த பொருள்களில் ஒருவர் தான் சந்திரன்.சந்திரன், திருமாலின் மார்பில் உதித்தவன் என்றும் அத்திரி முனிவருக்கு அனுசுயா தேவி மூலம் பிறந்தவர் என்றும் கூறுவதுண்டு.
திங்களூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் சுமார் 5 கிமி தொலைவில் உள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : பெரியநாயகி
ஷேத்திர பாலகர் : சந்திரன்
வாகனம் : வெள்ளை குதிரை
தரிசன நேரம் : காலை 7 - 12 மாலை 4 - 8
திங்களூர் கோவில் ஸ்தலத்தில் இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.உள்ளே தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு கஜல்ட்சுமியும், வடக்கு ப்க்கம் துர்க்காதேவியும்,ச்ண்டிகேஸ்வரரும் காட்சி தருகிறார்கள்.கிழக்கில் இடதுபுறத்தில் ஷேத்திர பாலகர் சந்திரன் சந்நிதி இருக்கிறது.தெற்கு வழியாக மண்டபத்தில் நுழைந்தால் அப்பூதி அடிகள்,அவர் குடும்பத்தார் திருஉருவச்சிலைகளும்,வலது புறம் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருஉருவச்சிலையும் உள்ளன.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 29, 2007
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #18 (அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்,திங்களூர்)
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
Thank u nataraj for this weeks another thivya tharisanam thru your good work.....:-) have a good week.
Post a Comment