Sunday, August 5, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #19 (அருள்மிகு வைத்தியநாதர் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்)



அருள்மிகு வைத்தியநாதர் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

நவக்கிரகங்களில் சூரியசந்திரனுக்குஅடுத்ததாக கருதப்படுவது அங்காரகன் எனும் செவ்வாய்.செவ்வாய் தலங்களில் விசேஷமானவை புள்ளிருக்கு வேளூர்,சிறுகுடி ,பழனி முதலியவை.இவற்றுள் மிகப்

பிரமாதமானது புள்ளிருக்கு வேளூர்.புள்ளிருக்கு வேளூர் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது,வைத்தீஸ்வரன் கோவில் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.

நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்குத் தெற்கில் மூன்றாவது கிரகமாக விளங்குபவர் செவ்வாய் (அங்காரகன்) அசுபகிரகம்.சிவபெருமானின் நெற்றி வியர்வையில் தோன்றி பூமாதேவியால்

வளர்க்கப்பட்டவர் என்பது ஒரு கருத்து.பராசர முனிவரின் மகனாக பிறந்து,பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் என்பது இன்னொரு கருத்து.நர்மதை நதிக்கரையில் பரத்வாஜ முனிவரின் ஆத்ம

சக்தியால் தோன்றி பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் என்பது இன்னொரு கருத்து.வீரபத்ரர் தக்ஷ்ன் யாகத்தை அழித்ததும் கோபம் தணிந்து ,அங்காரக வடிவம் பெற்றார் என்றும் சில புராணங்களில்

குறிப்பிடபட்டுள்ளன.
சிவப்பு நிறமான இவர்,ராஜ குணமுள்ளவர்.அழகானவர்.மாலினி ,சூலினி என்று இரண்டு மனைவிகள்.பெருந்தன்மை,நேர்மை,துணிவு,வைராக்யம் போன்ற நல்ல குணங்களைக் கொடுத்து

கவுரமும் அந்தஸ்தும் கிடைக்கச் செய்வார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் இருக்கிறது வைத்தீஸ்வரன் கோவில் திருத்தலம்.சீர்காழி தலத்திலிருந்து 5 கி.மி. மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மி.

இறைவன் : வைத்தியநாதர்

இறைவி : தையல்நாயகி

ஷேத்திர பாலகர் : அங்காரகன்

வாகனம் : ஆட்டுகிடா

தரிசன நேரம் : காலை 7 - 12 மாலை 4 - 8.30

கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்கள் இருந்தாலும்,மேற்கு கோபுர வாசல் வழியாகத்தான் அனைவரும் செல்கிறார்கள்.முலவரான வைத்தியநாதர்,சுயம்புலிங்கமாக எழுந்தருள்கிறார்.தீராத 4448

நோய்களை தீர்க்க ,கயிலாயத்திலிருந்து சிவ-பார்வதி பூலோகத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்தனர்.

இத்தலத்தில் அம்மை-அப்பருக்கு அடுத்தபடியாக சிறப்பு பூஜை பெறுபவர்கள் - செல்வமுத்துகுமாரசுவாமி என்றழைக்கப்படும் முருகர்.அடுத்தது அங்காரகன்."முத்தையா" என அன்பர்களால்

காதலுடன் அழைக்கப்படும் தேவியருடன் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால்,பட்டென்று தோஷம் விட்டுப்போகும்.

புள்ளிருக்கு வேளூர் என்பது தேவாரப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பழமையான பெயர்.ஜடாயு (புள்) பறவை ,ரிக்வேதம் (இருக்கு),முருகன் (வேள்),சூரியன் (ஊர்) - இந்த நால்வரும்

வழிபட்டதால் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர்.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு வைத்தியநாதர் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்

3 Comments:

Unknown said...

Hi நட்ராஜ்,

Its real nice ya..

Unknown said...

"புள்ளிருக்கு வேளூர் என்பது தேவாரப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பழமையான பெயர்.ஜடாயு (புள்) பறவை ,ரிக்வேதம் (இருக்கு),முருகன் (வேள்),சூரியன் (ஊர்) - இந்த நால்வரும்"

புள்ளிருக்கு வேளூர்-அழகிய மான்கள் உள்ள இடம் என்றுதான் நினைத்திருந்தேன்.எது சரியானது?

kuravan said...

அருமையான தொகுப்பு. இவற்றுடன் இணைந்த வரலாறுகளைக் கோர்வையாக அமைத்து வழங்கலாம். உதாரணமாகவைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் இருக்கும் தலம் திருப்புன்கூர். இங்கு நந்தனாருக்கு நந்தி நகர்ந்து சிவனைத் தரிசிக்க வழிவிட்டதாக வரலாறு. பின்னர் நந்தனார் மிகவும் முயன்று சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசித்து முக்திபெற்றார். நந்தனார் சரித்திரத்தை தாங்கள் தொடராகத் தொகுத்து வழங்கலாம். அதே போல் நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றவர்களின் வரலாறுகளையும் தொகுத்து ஒலி வடிவில் வழங்கலாம்.

ஆகிரா