Sunday, July 22, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #17 (அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம்,சூரியனார் கோவில்)




அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

நவக்கிரகங்களில் முதன்மையாகக் கருதப்படுவது சூரியன்.வாரத்தின் முதல் நாளான ஞாயிறு சூரியனின் பெயரைக் கொண்டே ஏற்பட்டுள்ளது.சூரியன் காசிப முனிவருக்கு அதிதி பால் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஆதித்தன் என்ற பெயர் உண்டாயிற்று.

சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது.ஆடுதுறைக்கு தெற்கில் இரண்டு கி.மி தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது.

இறைவன் : ஸ்ரீ சிவசூரியநாராயணமூர்த்தி

இறைவி : சாயாதேவி,உஷாதேவி

தீர்த்தம் : சூர்யப்புஷ்கரணி

ஸ்தலவிருக்ஷ்ம் : வெள்ளெருக்கு

தரிசன நேரம் : காலை 6 - 12.30 மாலை 4 - 8.30

சூரியனார் கோவில் ஸ்தலத்தில் சூரிய பகவான் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது.இராஜகோபுரத்திற்கு வெளியே சூர்யப்புஷ்கரணி என்ற மூன்று நிலைகளோடு ஐந்து கலசம் தாங்கி உயர்ந்து நிற்கிறது.சிவசூரியநாராயணமூர்த்தி இடதுபுறத்தில் உஷாதேவியும் வலதுபுறத்தில் சாயாதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள்.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7நிமி 53 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம்,சூரியனார் கோவில்

3 Comments:

Anonymous said...

nanru

Unknown said...

Excellent information about our Hindu Godess and temples,
God bless u
Hemasuresh
USA

Anonymous said...

Super tharisanam....thank u