Sunday, July 8, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #15 (ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் திருகோவில் திருக்குளந்தை)




ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் திருகோவில் திருக்குளந்தை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

ஸ்ரீ மாயக்கூத்தன் (அ) சோரநாதன் திருகோவில், பெருங்குளம்

நவதிருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் திருப்புளிங்குடியிலிருந்து நேராகச் செல்லும் சாலையில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 7 மைல் தூரம் ஏரல் செல்லும் பேருந்தில் சென்றும் இறங்கலாம்.திருக்குளந்தை பெருங்குளம் என்ற பெயரில் இப்போது விளங்குகிறது.

மூலவர் : சோரநாதன் ஸ்ரீனிவாஸ பெருமாள் : நின்ற திருக்கோலம் ,கிழக்கே திருமுக மண்டலம்

உற்சவர் : மாயக்கூத்தர்

தாயார் : குளந்தைவல்லித்தாயார் அலமேலு மங்கைத்தாயார் என்ற இரண்டு உபய நாச்சியார்கள்

தீர்த்தம் : பெருங்குளம்

விமானம் : ஆனந்த நிலய விமானம்

பெருமாள் நெஞ்சில் கமலாதேவி இடம் பெற்றுள்ள திருக்காட்சியும் இங்கு காணலாம்.சோரனான (அஸ்மாசரன் மீது) நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமானுக்கு சோரநாதன் என்று திருநாமம் ஏற்பட்டது.நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.


எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் திருகோவில் திருக்குளந்தை

1 Comment:

Anonymous said...

all temples are worth going to...athuvum pazhamaiyaana kovilgaluku poga koduthu vaithiru irukanum...ipadi vaaram onga moolamaaa...pogamal poga arrange senjatharku miga miga nandri nataraj....