Monday, July 2, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 14 (அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர்)





அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

சிவபெருமான் அந்தகாசுரனை வதைத்த தலமே திருக்கோவிலூர்.திருக்கோவலூர் என்பது பழைய பெயர்.
கருவறையில் லிங்க ரூபமாய் அருள் புரிகிறார் சிவபெருமான் .அன்னை சிவானந்தவல்லி,பெரியநாயகி எனும் பெயர்களில் தனி சந்நிதியில் அருள் புரிகிறார் .வடபுறத்தில் துர்கையம்மனும் முன்னர் கணபதியும் அருள் புரிகின்றனர்.
சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் வாழ்ந்தவர்தான் 63 நாயன்மார்களில் ஒருவரான மெய்பொருள் நாயனார்.தன் உயிர் போகும் நிலையிலும் தன்னை தாக்கியவர் சிவனடியார் வடிவிலிருந்ததால் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு,அந்த செய்தியை கேட்ட பின்னரே சிவனோடு கலந்த மெய்பொருள் நாயனாரின் ஜீவ சமாதி அம்பாள் சந்நிதிக்கு தெற்கே அமைந்துள்ளது.
இத்தகு சிறப்பு கொண்ட திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை நதிக்கரையில் உள்ளது.

மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க

எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்





அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர்

4 Comments:

Anonymous said...

மிகவும் நல்ல முயற்சி. உங்கள் பணி தொடரட்டும்.

Anonymous said...

nanru

Anonymous said...

enaku chance kidaka vendi karen neenga solara ovoru aalayamum poi paarka nataraj saarrr

Sarav said...

very informative. keep it up.