Wednesday, June 6, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 13 (அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்,ஆம்புர் )





அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்,ஆம்புர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).


இந்த ஆலயத்தில் குடிகொண்டு இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் சுயம்பு ஆஞ்சநேயராக சுமார் 11 அடி உயரம் கொண்டு அருங்காட்சி அளித்து வருகின்றார்.ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் தெற்கு நோக்கி இருந்தாலும் கிழக்கு நோக்கி பார்வை செலுத்தி வருகின்றார்

1489 ஆம் ஆண்டு விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் நமது நாட்டை ஆண்ட போது பலிஜா சமூகத்தினரின் அன்பான வேண்டுகோளை ஏற்று இந்த ஆலயத்தை புதுப்பித்ததாக ஆலய கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

சனீஸ்வரனை தன் கால்களால் மிதித்து ஆணவத்தை அழித்த புண்ணிய ஸ்தலம் தான் ஆம்புர்
பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்.

அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் ஒரு கால் பதித்த இடம் இதுவென்றும் மற்றொரு கால் பதித்த
இடம் ஆம்புர் நகரின் அருகே உள்ளே ஆனைமேடு என்று புராணம் கூறுகிறது.



மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க

எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்





அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்,ஆம்புர்

1 Comment:

Anonymous said...

nataraj........suyambu Anjineyar nu sonathum athuvum 11 adi nu ketathum...ipovey poi parkanum pola irunga....thank u thank u