Monday, June 4, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# பத்து (ஸ்ரீ சர்வமங்கள ஸமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் சுருட்டப்பள்ளி)



ஸ்ரீ சர்வமங்கள ஸமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் சுருட்டப்பள்ளி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

சென்னையிலிருந்து 56 கிமி தொலைவில் தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் சயன சிவமாக பள்ளிக்கொண்டீஸ்வரர் காட்சியளிக்கிறார்.
விஜய நகரத்து மன்னர் ஹரிஹர புக்கரால் பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு இத்திருக்கோயில் கட்டப்பட்டதால் சைவத்திருமறையில் இடம்பெறவில்லை.
வால்மீகேஸ்வரர்(வால்மீகி பூஜித்த லிங்கம்) ராமலிங்கேஸ்வரர் (ராமர் பூஜித்த லிங்கம்) லிங்கோத்பவர்( லிங்கதில் சிவன் நிற்கிறார்) ,கௌரி ஸ்மேத தக்சிணாமூர்த்தி மற்றும்
சப்த மாதாக்களும் இத்திருக்கோயிலின் சிறப்பு.

இத்திருக்கோயிலில் பள்ளிக்கொண்டீஸ்வரர் சர்வமங்கள (பார்வதி) மடியில் சயனத்தில் காட்சியளிக்கிறார்.இதே போல் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை பார்க்கலாம்.சிவனை இங்கே (சுருட்டப்பள்ளி) மட்டும் தான் காண முடியும்.இங்கே மஹா பிரதோஷம் மற்றும் மஹாசிவராத்திரி மிகவும் சிறப்பு.

மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க


எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

ஸ்ரீ சர்வமங்கள ஸமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் சுருட்டப்பள்ளி

5 Comments:

Anonymous said...

nanru

Anonymous said...

pls keep up the good work...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

படமும் பாட்காஸ்டும் அருமை!
நற்பணியைத் தொடருங்கள்!

சிவனாரின் சயனத் திருகோலத் தலம் இது ஒன்று தான். கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் பற்றியும், நடுவே சில பாடல்களும் தருவது இன்னும் சிறப்பாக்கும் என்று கருதுகிறேன்.

V.Subramanian said...

பேரன்புமிக்க நடராஜவர்க
ளுக்கு சர்வாபீஷ்டமும் உண்டாவதாக ஆசிகளரும் பெரும் தொண்டு செய்துவரும் உங்களுக்கு என் சிரந் தாழ்ந்த ஆசிகள் உரித்தாகுக்.மிக்க முயற்சியுடன் வலயேற்றம் செய்துள்ள கோயில்கள் மிகவும் அருமையான விளக்கத்துடன் அமைந்துள்ளமை பாராட்டுக்கு உரியது.
அன்புடன் வெ.சுப்பிரமணியன்,ஓம்.

Archana Raghuram said...

I have been meaning to visit this temple for a long time. Thanks for the great podcast, it almost felt like I was there.