Wednesday, June 6, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 12 (அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்,திருமுக்கூடல்)




அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்,திருமுக்கூடல் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).


காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில் காஞ்சியிலிருந்து 20 கி.மி. தொலைவில் உள்ள பழையசீவரத்தின் அருகில் உள்ளது லட்சுமி நரசிம்மர் ஆலயம்.இதன் எதிரில் பாலாறு,செய்யாறு,வேகவதியாறு ஆகிய மூன்று நதிகளும் கூடும் திருமுக்கூடலில் உள்ளது அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்.

மூலஸ்தானத்தில் வலதுபுறம் பிருகு முனிவர் தவம் செய்யும் நிலையிலும் ,இடதுபுறத்தில் பூமாதேவியும் காட்சி கொடுக்கிறார்கள்.சங்கு சக்கரதாரியாய் அபய ஹஸ்தத்துடன் மூலவர் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.பெருமாளின் திருமார்பில் அலர்மேலு மங்கையும்,பத்மாவதி தாயாரும் காட்சியளிக்கிறார்கள்.ஆழ்வார்கள் சன்னிதியும் வரப்பிரஸாதியான கர்ண குண்டலத்துடன் கூடிய கர்ண குண்டல ஆஞ்சநேயர் சன்னிதியும் அமைந்துள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சீவரம் பார்வேட்டைக்கு பழையசீவரம் எழுந்தருளும் போது அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவிலுக்கும் எழுந்தருள்கிறார்.



மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
http://podbazaar.castmetrix.net/download/144115188075856842/1/TamilPodcast12VaaramOruAlayamVenkatesaPerumalThirukovilThiruMukkoodal.mp3

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்


எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்,திருமுக்கூடல்

2 Comments:

Anonymous said...

nanru

Anonymous said...

ahaaaa.....nerilaye poitu vanthaa maathri irukunga nataraj saar...ty