Monday, May 28, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# ஒன்பது (அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில்)



அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன்,பார்வதி,பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புத பதி.வடக்கு நோக்கிய வக்ர காளியும் மேற்கு நோக்கிய வக்ர லிங்கமும் தெற்கு நோக்கிய சனியும் காட்சி தரும் ஊர் திருவக்கரை.

சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் அனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.
ஆறடி ஊயரத்தில் வரதராஜ பெருமாள் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.இறைவி அம்ருதாம்பிகை.
திருவக்கரை என்றதும் நினைவுக்கு வருவது வக்ரகாளியம்மன்.சாதாரணமாக காளி கோயில் ஊர் எல்லையில் இருக்கும்.ஆனால் இங்கோ திருக்கோயில் வளாகத்துக்குள் குடி கொண்டு உள்ளார்.


மேலும் இத்தலத்தை ப்ற்றி கேட்க



எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்





எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை

6 Comments:

Anonymous said...

Migavum nanru

Anonymous said...

very nice to hear..keep up

Anonymous said...

nanru

Anonymous said...

You are doing a great job. Simply loved the podcast. I do not know how to read tamil hence podcasts are very useful. This the first time I am coming across a Kali in this form. Keep up the good work.

- Archana

Anonymous said...

Mikka Nandri...Ovvoru vaaramum edhirpaarppudan kaathirukkirom...

Unknown said...

you are doing an excellent work by taking us thro all the beautiful temples.Though i would like to visit all the temples, i am unable to do so. But still i visited four of the temples of navagraha near Thanjavur. I have yet to visit some 5 more temples which i hope to visit in the near future. But your guidance is excellent. Keep up the good work