ஸ்ரீ ஸாரநாதர் ஆலயம்,திருச்சேறை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாக திருவாருர் செல்லும் வழியில் உள்ளது.
மூலவர் : ஸாரநாதர் : கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் : ஸாரநாயகி
தீர்த்தம் : ஸாரபுஷ்கரிணி
விமானம் : ஸாரவிமானம்
108 திவ்ய ஸ்தலங்களில் இத்திருத்தலம் தவிர பெருமாள் தனது 5 தேவிகளுடன் காட்சி தருவது வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லை.இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள
காட்சி பரமபதம் எனப்படும்.குடந்தையில் உள்ள சித்திரத்தேர் திருவாருர்த்தேரினைப் போன்ற இங்கு உள்ள தேர் மிகப் பெரியதாகும்.திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, September 30, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #27 (ஸ்ரீ ஸாரநாதர் ஆலயம்,திருச்சேறை) |
Sunday, September 23, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #26 (ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம்(கபிஸ்தலம்)) |
ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.பாபநாசம் ரயில்நிலையத்திலிருந்து 3 கி.மி தொலைவில் உள்ளது.
மூலவர் : கஜேந்திரவரதர் : புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : ரமாமணவல்லி(பொற்றாமறையாள் )
தீர்த்தம் : கஜேந்திரபுஷ்கரிணி ,கபிலதீர்த்தம்
விமானம் : ககநாக்ருத விமானம்
இக்கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு அமைந்துள்ள கபில தீர்த்தம் எனும் குளத்தில் ஒருநாள் கஜேந்திரன்(யானை) நீரருந்த இறங்கும் போது முதலை கவ்வ,யானை பிளிற,கருட வாகனத்தில் வந்த மகா விஷ்ணு தம் சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று யானைக்கு மோட்சமளித்ததாக வரலாறு.கஜேந்திர மோட்சம் பங்குனி மாதத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, September 16, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #25 (அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம்) |
அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
கேது ஞானத்தை கொடுக்கக் கூடியவர்.ஞானம்.மோட்சம்,புனித நீராடல்,அயல்நாட்டுப் பயணம்,கடின உழைப்பு,வைத்தியர்,தீ விபத்து,தோல் வியாதி,ஜுரம் - இப்படி பலவற்றிற்கு காரணமாக இருப்பவர் கேது.கேது பகவானின் அதிதேவதை பிரம்மா,சித்திரகுப்தன்.விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுவது,கொள்ளு தானம் செய்வது போன்றவை கேது ப்ரீத்தியாகும்.
தலம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் தர்மகுளம் என்று ஒரு சிற்றூர்.இதற்கு தெற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் நாகநாதஸ்வாமி ஆலயம்.
இறைவன் : நாகநாதஸ்வாமி
இறைவி : சௌந்தர்யநாயகி
ஷேத்திர பாலகர் : கேது
வாகனம் : கழுகு
நிறம் : சிவப்பு
தானியம் : கொள்ளு
மலர் : செவ்வரளி
ரத்தினம் : வைடூர்யம்
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 7
ஆலயம் கிழ்க்கு நோக்கி உள்ளது.கிழ்க்கு கோபுர வாசல் முன்பு நாக்தீர்த்தம் உள்ளது.வாசுகி பாம்பு நாக்நாதஸ்வாமியை வழிபட்டு வந்தபோது அமைந்த தீர்த்தம் என்கிறார்கள்.விக்கிரம சோழன் கல்வெட்டில் இத்தலம் திருவலபுரம் எனக் குறிப்பிடப்பட்டிறிக்கிறது.இத்தலத்தின் ஸ்தல விருக்ஷ்ம் மூங்கில்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 16 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம்
Sunday, September 9, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #24 (அருள்மிகு நாகநாதர் ஆலயம்,திருநாகேஸ்வரம்) |
அருள்மிகு நாகநாதர் ஆலயம்,திருநாகேஸ்வரம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருநாகேஸ்வரம் நவக்கிரகங்களில் ராகு பகவானின் தலம்.ஒருவரது யோகம்,பதவி,தொழில்,வளமான வாழ்வு,எதிர்ப்பை வெல்லல்,வறுமை நீங்க,கடன் தீர,சக்தீ ஆகியவற்றை தர வல்லவர் ராகு .ராகு யோகத்திற்கு அதிபதி.ராகுவையும்,கேதுவையும் முறைப்படி கிரகங்கள் என்று அழைப்பதில்லை.இவற்றை சாயா கிரகங்கள் என்று சொல்லுவார்கள்.
தலம்: கும்பகோணதிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம்.தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணதிலிருந்து கிழக்கே 5 கி.மி தொலைவில் உள்ளது
இறைவன் : நாகநாதர்,அர்த்த நாரீசர்
இறைவி : பிறையணிவாள்நுதலம்மை,கிரிகுஜாம்பிகை
ஷேத்திர பாலகர் : ராகு
வாகனம் : நீல சிங்கம்
நிறம் : கருமை
தானியம் : உளுந்து
மலர் : மந்தாரை
ரத்தினம் : கோமேதகம்
உலோகம் : கருங்கல்
தரிசன நேரம் : காலை 5 - 12 மாலை 4 - 9
அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று பன்னிரெண்டு சுவாமி புஷ்கரணிகள். சேக்கீழார் சுவாமிகளால் திருப்பணிகள் செய்யப்பெற்ற இத்தலத்திற்கு செண்பகவனம்,கிரிகன்னிகைவனம் போன்ற பெயர்களும் உண்டு.நாகமகிய ராகு வழிப்பட்டமையால் "திருநாகேஸ்வரர்" என்று திருப்பெயர் உண்டாகி நாகநாதஸ்வாமி என்றும் நிலையாகிவிட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 16 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Tuesday, September 4, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #23 (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,திருநள்ளாறு) |
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,திருநள்ளாறு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நள்ளாறு என்பதற்கு ஆறுகளின் மத்தியில் உள்ள பகுதி என்று பொருள்.அரிசொல் மற்றும் வாஞ்சை ஆறு எனும் இரண்டு ஆறுகள் இத்தலத்தின் தெற்கிலும் வடக்கிலும் ஓடுவதால் இத்தலத்திற்கு திருநள்ளாறு என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவார்கள்.அருள்மிகு பிராணேஸ்வரி சமேத தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் புராதனப் பெருமை வாய்ந்த ஆலயம் என்றாலும் இங்குள்ள சனீஸ்வர பகவான்
சந்நிதிதான் மிகவும் பிரசித்தமானது.
கும்பகோணத்தில் இறங்கினால் 38 கி.மி தொலைவில் உள்ளது திருநள்ளாறு.கும்பகோணம் செல்லும் பாதையில் காரைக்கால்-மயிலாடுதுறை பேருந்து தடத்தில் உள்ளது.மயிலாடுதுறையிலிருந்தும் பஸ் வசதிகள் உண்டு.
இறைவன் : தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி : பிராணேஸ்வரி
ஷேத்திர கதாநாயகர் : சனி
தானியம் : எள்
மலர் : வன்னி,கருப்பு குவளை
வஸ்திரம் :கருப்பு நிற ஆடை
ரத்தினம் : நீலம்
வாகனம் :காக்கை
தீர்த்தம் : நள தீர்த்தம்
தரிசன நேரம் : காலை 5 - 12 மாலை 4 - 9.00
ஆலயத்தின் இராஜகோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது.உள்ளே கொடிமரம்,முன் மண்டபத்தை கடந்து வந்தால் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் நந்தியும் குடி கொண்டிருக்கிறார்கள்.
ஆலயத்தின் உள்ளே முதலில் இருப்பது இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் .அடுத்தது அன்னை பிராணேஸ்வரியின் ஆலயம்.தென்புற வாசல் வழியாக வந்தால் தியாகராஜர் சந்நிதி.நீலோத்பலாம்பாள் சகித ஸ்ரி நகவிடங்க செண்பக தியாகேசர் திருவருள் புரிகிறார்.அற்புத அருள்கொண்ட மரகதலிங்கத் திருமேனியும் கவர்கிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 58 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்