Sunday, August 12, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #20 (அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்,திருவெண்காடு)




அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்,திருவெண்காடு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

திருவெண்காடு நவக்கிரகங்களில் புதனுடைய தலம்.கல்வி,அறிவு,பேச்சுதிறமை,இசை,சோதிடம்,கணிதம்,புலமை ஆகியவற்றை தர வல்லவர் புதன்.இவருக்கு வித்யாகாரகன் என்றும் பெயர். புதனுக்குப் பிடித்த நிறம் பச்சை. சாத்வீக குணம் சூரியனிடமிருந்து பிரகாசத்தை இழுத்து செடி, கொடிகளை பச்சை நிறமாக்கும் தன்மை உடையவர். பச்சைப் பயிறு தானியத்தை தானம் கொடுத்தால் ப்ரீதி அடைவார்.

தலம்: மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ., சீர்காழியில் இருந்து 10 கி.மீ., பூம்புகாரிலிருந்து 8 கி.மீ. பஸ் உண்டு.

இறைவன் : ஸ்வேதாரண்யேஸ்வரர்

இறைவி : பிரம்ம வித்யாம்பிகை

ஷேத்திர பாலகர் : புதன்

வாகனம் : குதிரை

தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 9

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடிய பெருமை இத்தலத்திற்கு உண்டு. காசிக்கு இணையான ஆறுதலங்களுள் இதுவும் ஓன்று. இத்திருத்தலத்திற்கு சுவேதவனம் என்று பெயர் (சுவேதம் என்றால் வெண்மை. வனம் என்றால் காடு). இக்கோயிலில் சுவேதாரண்யர், அகோர முர்தி, நடராஜர் என்று மும் மூர்த்திகள். பிரம்மவித்யாம்பிகை, அஷ்டபுஜ துர்கை, காளி என்று மூன்று அம்பிகை சந்நதிகள். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று சுவாமி புஷ்கரணிகள். ஆலமரம், கொன்றை, வில்வம் என்று மூன்று தல விருக்ஷங்கள்.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்,திருவெண்காடு

4 Comments:

Anonymous said...

Hi Nataraj,
Every podcast of yours very informative...thank you for taking time in spreading the word of our priceless temples & its history in short.....thanks

sivapillai said...

மிக்க நன்றி
உங் படைப்பு கோவில்களைப்பற்றி அறிவதற்கு மிக வஉதவியாக உள்ளது,

வடுவூர் குமார் said...

பல விபரங்கள் அறிந்துகொண்டேன்.
மிக்க நன்றி

Unknown said...

Great Work. This is an age where the people who rule us are hitting at the foundation of our beliefs in religion and you are doing your bit in countering that. kudos. All the best and please continue to do the good work
ramani