Sunday, August 19, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #21 (அருள்மிகு ஆபத்ஸஹாயேஸ்வரர் ஆலயம்,ஆலங்குடி)



அருள்மிகு ஆபத்ஸஹாயேஸ்வரர் ஆலயம்,ஆலங்குடி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

பஞ்சாரண்யத் தலங்களில் ஒன்றான ஆலங்குடிக்கு காசி ஆரண்யம் என்றும் திருஇரும்பூளை என்றும் பெயர்கள் உண்டு. இத்தலத்தில் கோயில்கொண்டிருக்கும் இறைவன் மூலவர்

ஆபத்ஸஹாயேஸ்வரர். இறைவியின் பெயர் ஏலவார் குழல் அம்பிகை. நவக்கிரகத் தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது ஆலங்குடி.

தலம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் இருக்கிறது ஆலங்குடி. நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலும் கும்பகோணம் ம்ன்னர்குடி சாலையில்

(நீடாமங்கலம் வழி) கும்பகோணத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவிலும் உள்ளது. தலவிருட்சம் பூளைச் செடி. இரனால் இத்தலத்திற்கு திரு இரும்பூளை என்ற பெயர் உண்டாயிற்று.

இறைவன் : ஆபத்ஸஹாயேஸ்வரர்

இறைவி : ஏலவார் குழல் அம்பிகை

ஷேத்திர பாலகர் : குரு

வாகனம் : யானை

தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 8:30

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மூவராலும் பாடல் பெற்ற தலம் ஆலங்குடி. இறையருளால் சுந்தரர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பூலோகத்தில் மீண்டும் பிறந்து தேவாரம் பாடி தமிழ் மணம் பரப்பி

சைவத் தொண்டில் ஈடுபட்டார். இத்தலத்திருகுச்
சுந்தரர் வந்தபோது காவிரியாகிய வெட்டாறு வெள்ளப்பெருக்கெடுத்தோடியது. இறைவனே ஓடக்காரனாக வந்து திருவிளையாடல் புரிந்து

சுந்தரரையும் உடன் வந்த அடியார்களையும் கைப்பற்றிக் கப்பாற்றியதாக வரலாறு. படகு ஆற்றில் அமிழ்ந்த இடம் ’அமிழ்ந்தீஸ்வரம்’ என்றும், படகு பாறையில் மோதி உடைந்த இடம்

’கப்பலுடையான்’ என்றும், இறைவன் கைப்பிடித்துக் காப்பாற்றிய இடம் ’கைப்பத்தூர்’ என்றும் இப்போதும் விளங்குகின்றன.

இத்திருத்தலத்தின் பெருமையும் தலபுராண வைபவமும் மிகவும் சிரேஷ்டமாக விளங்குகிறது. இக்கோவிலில் பஞ்சபருவ உற்சவமும் - மாதாந்திர குருவாரம் தோறும் நடைபெறும் விசேஷ

தரிச்ன்மும் - குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மறுராசிக்கு பிரவேசிக்கும் புண்ணிய காலங்களிலும் - மாசி மாதம் வரும் குருவாரமும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சித்திரை

பௌர்ணமியை முதற்கொண்டு பத்து நாள் உற்சவம், தக்ஷிணாமூர்த்தி தேர்த் திருவிழாவுடன் கொண்டாடப்படுகிறது. தைபூசம், பங்குனி உத்திரத்தில் தீர்த்தவாரியும் நடைபெறும்.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 9 நிமி 17 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்


எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் அருள்மிகு ஆபத்ஸஹாயேஸ்வரர் ஆலயம்,ஆலங்குடி

0 Comments: