அருள்மிகு அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோவில்,திருவாலி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
இத்திருத்தலம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.
திருவாலி -- (திருநகரி)
மூலவர் : அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மர்) கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்
தாயார் : பூர்ணவல்லி
தீர்த்தம் : இலாக்ஷண புஷ்கரணி
விமானம் : அஷ்டாசர விமானம்
திருமால் நரசிம்ம அவதாரம் செய்த போது இரண்யனை வதம் செய்து சீற்றம் அடங்காமல் இருப்பதைப் பார்த்து அழிவிலிருந்து பூவுலகம் காக்கப்பட வேண்டும் என்று அனைவரும் பிராட்டியை வேண்ட , பிராட்டி எம்பெருமானின் தொடையில் வந்து அமர்ந்தார். அமர்ந்த பிராட்டியை எம்பெருமான் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்தில் இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதால் திருவாலி என்றாயிற்று.மேலும் எம்பெருமான் திருமணக்கோலத்தில் திருவாலிக்கும் , திருநகரிக்கும் இடைப்பட்ட வேதராஜபுரம் என்ற இடத்தில் வரும்போது ,திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த , எம்பெருமான் திருமங்கையின் செவிகளில் அஷ்டாச்சர மந்திரத்தை உபதேசம் செய்தார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோவில்,திருவாலிக்கோவில்
1 Comment:
ungal pathivu arumai thodarungal ungal pani
Post a Comment