Sunday, November 16, 2008

அருள்மிகு நாராயணப்பெருமாள்(நந்தா விளக்கு) திருக்கோவில்,திருமணிமாடக்கோவில்



அருள்மிகு நாராயணப்பெருமாள்(நந்தா விளக்கு) திருக்கோவில்,திருமணிமாடக்கோவில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com

இத்திருத்தலம் திருநாங்கூரின் மத்தியில் அமைந்துள்ளது.

மணிமாடக்கோவில் -- (திருநாங்கூர்)

மூலவர் : நாராயணப்பெருமாள்(நந்தா விளக்கு) கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார் : புண்டரீகவல்லி நாச்சியார்
தீர்த்தம் : இந்திர புஷ்கரணி,ருத்ர புஷ்கரிணி
விமானம் : ப்ரணவ விமானம்

திருமங்கையாழ்வார் நாராயணனை நந்தா விளக்கே என போற்றுகிறார். ஒருவராலும் தூண்டப்படாமல் தானாகவே ஒலியுடன் திகழும் தூண்டா விளக்காகும். அதாவது நித்யமான பிரகாசமான் ஞானத்தை உடையவன் என்பது பொருள்.
அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்த இந்த ஸ்தலத்தில் பெருமாள் எழுந்தருளியிருப்பதால் திருமணிமாடக்கோயில் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.இந்த மணிமாடக்கோயில் நாராயணனே பத்து திருமேனிகளை எடுத்துக் கொண்டு தான் ஒரு திருமேனியாக வந்ததாகவும் கூறுவர்.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்


எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு நாராயணப்பெருமாள்(நந்தா விளக்கு) திருக்கோவில்,திருமணிமாடக்கோவில்

1 Comment:

ஜீவி said...

பயனுள்ள தகவல்களைச் வெகு சிறப்பாகத் தருகிறீர்கள்.
தொடர்ந்து படிக்கையில் அந்தந்த கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. அந்த வாய்ப்பு வரும் பொழுது, இந்த பதிவுகளும், செய்திகளும் நிச்சயம் நினைவுக்கு வந்து மகிழ்ச்சியளிக்கும்.
மிக்க நன்றி.