அருள்மிகு வீழிநாதர் திருக்கோவில், திருவீழிமிழலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
திருவாரூர் மாவட்டத்தில் கொடவாசல் வட்டத்தில் பூந்தோட்டம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே பத்து கிலோமிட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.
இறைவன்: வீழிநாதர், மாப்பிள்ளை சுவாமி
இறைவி: சுந்தர குஜாம்பிகை
தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம்
தலமரம் : பலா
தற்போதைய பெயர் : வீழிமிழலை
இறைவி தவம் இருந்து இறைவனை திருமணம் புரிந்து கொண்ட ஸ்தலம் என்பதால் ,திருமணம் ஆக வேண்டிய பெண்கள் கல்யாண சுந்தரரை வழிப்பட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தலத்து இறைவனை பிரம்மன் வழிப்பட்டு படைக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றான். திருமால் சிவபெருமானிடமிருந்து ஜலந்திரனை அழிக்க உபயோகித்த சக்கரப்படையைப் பெறுவதற்க்காக இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி ஆயிரம் தாமரை மலர்களால் தினமும் பூஜித்து வந்தார். ஒருநாள் ஒரு மலர் குறைந்து காணப்பட்டது. பூஜை தடைபடாமல் இருக்க,உடனே தனது வலது கண்ணை இறைவன் திருவடியில் சமர்ப்பித்தார். திருமால் கண்மலர் சாத்தி வழிப்பட்ட இடம் தான் திருவீழிமிழலை.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 26 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, June 29, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #66 அருள்மிகு வீழிநாதர் திருக்கோவில், திருவீழிமிழலை |
Sunday, June 22, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #65 அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை |
அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி தொலைவில் உள்ளது.
தற்போதய பெயர் : வடகுரங்காடுதுறை
இறைவன் : தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர்
இறைவி : ஜடா மகுட நாயகி
தலமரம் : தென்னை
தீர்த்தம் : வாலிதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
வாலியும்,சுக்ரீவனும் வழிப்பட்ட இரண்டு சிவஸ்தலங்கள் குரங்காடுதுறை என்ற பெயரில் இருக்கின்றன. திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் உள்ளதால் இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது.போரில் தனது அறுந்த வாலை இத்தலத்து இறைவனை வழிப்பட்டு மீண்டும் வால் வளரும் பேறு பெற்றான்.கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோபுரத்தில் வாலி இறைவனை வழிப்படும் சிற்பமும் ,ஈசன் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை
Sunday, June 15, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #64 அருள்மிகு ஓதனேஸ்வரர் ஆலயம், திருச்சோற்றுத்துறை |
அருள்மிகு ஓதனேஸ்வரர் ஆலயம், திருச்சோற்றுத்துறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
visit http://www.adhikaalai.com
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியிலுள்ள கண்டியூரிலிருந்து கிழக்கே சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது திருச்சோற்றுத்துறை திருத்தலம்.
தற்போதய பெயர் : சோற்றுத்துறை
இறைவன் : ஓதனேஸ்வரர்,சோற்றுத்துறை ஈசர்
இறைவி : அன்னபூரணி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
’சோழ நாடு சோறுடைத்து’ என்பது முதுமொழி. சோற்றுக்குப் பஞ்சமில்லாத சோழநாட்டில் திருச்சோற்றுத்துறை என ஒர் ஊரின் பெயர் அமைந்திருப்பதில் வியப்பேதும் இல்லை. திருவையாற்றை மையமாக கொண்ட சபஸ்தானத் தலங்களில் திருச்சோற்றுத்துறை மூன்றாவது தலமாகும். இத்தலத்திற்கு தெற்கில் ஓடும் வாய்காலுக்கு சோற்றுடையான் வாய்க்கால் என்று பெயர். திருமழப்பாடியில் நடைப்பெற்ற நந்தியம்பெருமானின் திருமணத்தின் போது உணவுவகை அனைத்தும் இத்தலத்திலிருந்து சென்றதாக வரலாறு.காசி மாநகரில் பஞ்சம் நீக்கி பசிப்பிணி தீர்க்கும் அன்னபூரணி போல் இத்தலத்திலும் தேவி தம்மை நாடிவரும் பக்தர்களின் பசிப்பிணி நீக்கி அருள்மழை பொழிகிறாள்.காசி விஸ்வநாதர் போல் திருச்சோற்றுத்துறை ஓதனேஸ்வரர் பிறவிப் பிணி நீக்கி அருள்புரிகிறார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 20 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, June 8, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #63 அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர் |
அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் உள்ளது திருஅவளிவநல்லூர். தஞ்சாவூர் நீடாமங்கலம் இருப்புப் பாதையில் உள்ள அம்மாபேட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருஅவளிவ நல்லூர்.
இறைவன்: பாதிரிவனேஸ்வரர்,சாட்சிநாதர்,தம்பரிசுடையார்
இறைவி: சவுந்தர்ய நாயகி
தீர்த்தம் : சிவபுஷ்கரணி
தலமரம் : பாதிரி மரம்
தற்போதைய பெயர் : திருஅவளிவநல்லூர் (பாதிரி வனம்,புல்லாரண்யம்)
பஞ்சாரண்யத் தலங்களில் இரண்டாவதாகத் தரிசிக்க வேண்டியது திருஅவளிவநல்லூர். காலை சந்தி நேரமாகிய 8.30 முதல் 9.30 மணிக்குள் திருஅவளிவநல்லூரில் கோயில் கொண்டிருக்கும் சவுந்தர்ய நாயகி சமேத பாதிரிவனேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும்.மூலவர் சிவலிங்கத்தோடு இறைவனும் உமையம்மையும் காட்சிக் கொடுக்கும் அமைப்பை ஒரு சில சிவாலயங்களில் மட்டுமே காண முடியும். தை அமாவாசையன்று பாதிரிவனேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் சிவபுஷ்கரிணியில் தீர்த்தம் அருளும்போது பக்தர்களும் புனித நீராடி மகிழ்வது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர்
Sunday, June 1, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #62 அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி |
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
மயிலாடுதுறை - திருவாரூர் பஸ் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்கி,அங்கிருந்து எரவாஞ்சேரி பஸ் மார்க்கத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் திலதர்ப்பணப்புரி புண்ணியத்தலம் உள்ளது.
இறைவன்: முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்
இறைவி: சொர்ணவல்லி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தலமரம் : மந்தார மரம்
தற்போதைய பெயர் : திலதர்ப்பணப்புரி (திலதைப்பதி)
பித்ரு தலங்கள் இந்தியாவில் மொத்தம் ஏழு.காசி,திரிவேணி சங்கமம்,ராமேஸ்வரம்,ஸ்ரீ வாஞ்சியம்,திருவெண்காடு,கயா என்கிற ஆறோடு ஏழாவது சிறப்புத்தலம் திலதர்ப்பணப்புரி.ராமாயணத்தில்,சீதா பிராட்டியை ராவணன் கடத்திச் செல்லும் போது ஜடாயு பறவை வழிமறித்து சண்டை போட்டு வாளினால் வெட்டுப்பட்டு இறந்தது. இலங்கையை நோக்கி வரும் போது,திலத்தர்ப்பணப்புரிக்கு வந்த ராமபிரானும்,லட்சுமணனும் தங்கள் தந்தையான தசரத சக்ரவர்த்திக்கும்,தந்தைக்கு நிகராக நேசித்த ஜடாயு பறவைக்கும் திலதர்ப்பணப்புரியில் தர்ப்பணம் செய்து பிண்டம் இட்டனர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி