Sunday, February 3, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #45-அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், திருக்காரிக்கரை



அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், திருக்காரிக்கரை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

சென்னை புத்தூர் நெடுஞ்சாலையில் நாகலாபுரம் - பிச்சாட்டூர் இடையில் உள்ளது.திருவள்ளூரிலிருந்து சுமார் 50 கிமி தொலைவில் உள்ளது.திருவள்ளூரிலிருந்து பேருந்து வழியாகச் சென்றால் ஊத்துக்கோட்டை,நாகளாபுரம் ஊர்களுக்கு அடுத்து திருக்காரிக்கரை வரும்.

தற்போதய பெயர் : ராமகிரி
இறைவன் : வாலீஸ்வரர்
இறைவி : மரகதாம்பிகை
தலமரம் : அரசமரம்
தீர்த்தம் : நந்திதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்,திருநாவுக்கரசு சுவாமிகள்

தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 11மணி வரை, மாலை 3 மணிமுதல் 6 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலை 7 மணி


ராமருக்காக அனுமன் கொண்டுவந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும்,மடுவை மலையாக (கிரியாக) மாற்றியதாலும் காளிங்க-மடுகரை -திருக்காரிக்கரை என மாறியது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், திருக்காரிக்கரை

0 Comments: