Sunday, October 28, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #31 (அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்,திருநெல்வேலி)




அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்,திருநெல்வேலி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

14 ஏக்கர் பரப்பளவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான கோயிலில் காந்திமதிக்கு இடப்பக்கம் நெல்லையப்பர் சந்நிதி.இரண்டு கோயில்களையும் ஏழாம் நூற்றாண்டில் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் தனித்தனியாகக் கட்டியூள்ளான்.பின்னர் வடமலையப்பப் பிள்ளை என்பவர்,இரண்டையும் இணைக்கும் விஸ்தாரமான சங்கிலி மண்டபத்தைக் கட்டியிருக்கிறார்.

இறைவன் : நெல்லையப்பர்
இறைவி : காந்திமதி அம்மன்
ஸ்தல விருக்ஷ்ம் : மூங்கில்
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 9

நெல்லையப்பர் திருக்கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் தாமிர சபையாகத் திகழ்கிறது.நடராஜப்பெருமான் ஆனந்தக்கூத்தனாக அருள்புரிகிறான்.கி.பி 950 -ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இங்கே உள்ளது.இங்குள்ள மணிமண்டபத்தில் ஒரே கல்லில் நுட்பமாக உருவாக்கப்பட்ட 48 சிறுதூண்களையும் ஒரு நாணயத்தால் தட்டும்போது,ஒவ்வொரு தூணிலிருந்தும் ஒவ்வொரு விதமான இனிய சத்தம் கிளம்புவது பிரமிக்க வைக்கிறது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 23விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்,திருநெல்வேலி

6 Comments:

வடுவூர் குமார் said...

வேணு வனம்- திருநெல்வேலி ஆனது மற்றும் நெல்லையப்பர் பெயர் வரக்காரணம் என்று பல அருமையான தகவல்களை சொல்லியுள்ளீர்கள்.
நன்றாக உள்ளது.

Unknown said...

Nellaiyappr Aalayam -- Enna sarrr
aachhu mp3k...kku

Marupadiyum thayavusaithu

reacord pannureengala...

Nanri.

Unknown said...

Sampath again...
Please forgive me; when I downloaded again, I did not have
any problem(s)....

goma said...

நெல்லைவாசியான எனக்கே இப்பொழுதுதான் நெல்லையப்பர் வரலாறு தெரிகிறது.உங்கள் எழுத்தின் சக்தி புரிகிறது .தொடரட்டும் உங்கள் பணி.

Nataraj said...

Thanx for all your responses.Please do keep hearing

Anonymous said...

Sir, you are doing a wonderful job, i am amazed by your wonderful postings