Sunday, October 7, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #28 (ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர்)



தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #28 (ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர்)


ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது.மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வடத்திருக்கூடலூர் என்றும் கூறுவர்.

மூலவர் : வையம்காத்த பெருமாள் : கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார் : புஷ்ப்பவள்ளி

தீர்த்தம் : சக்ரதீர்த்தம்

விமானம் : சுத்தஸ்தவவிமானம்

நந்தக முனிவரோடு தேவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வழிபட்டமையால் இதற்கு கூடலூர் என்று பெயர் ஏற்பட்டதாக கூறுவர்.திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.ராணி மங்கம்மாளுக்கு இக்கோவிலில் சிலையெடுக்கப்பட்டுள்ளது.இக்கோவிலின் உட்புற மதில்சுவரில் இருக்கும் கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர்

1 Comment:

தி. ரா. ச.(T.R.C.) said...

இவ்வளவு நல்ல பதிவை எப்படி பார்க்காமலிருந்தேன்..இனி சிக்கெனப்பிடித்தேன்......