Sunday, October 14, 2007

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #29 (அருள்மிகு சனி பகவான் ஆலயம்,குச்சனூர்)




அருள்மிகு சனி பகவான் ஆலயம்,குச்சனூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

சுயம்பு வடிவத்தில் தோன்றிய சனீஸ்வர பகவான் இந்தியாவிலேயே இவர் ஒருவர் தான்.தேனி நகரத்திலிருந்து தெற்கே 20 கி.மி தூரத்தில் உள்ளது குச்சனூர்.குச்சனூர் கிராமம் முல்லையாற்றுக் கரையில் அமைந்திருக்கிறது.செண்பக மரங்கள் கொண்ட சோலையாக இருந்தபோது செண்பகநல்லூர் எனப் பெயர் கொண்டது.குச்சுப்புல் குடிலில் சுயம்புவாகக் காட்சியளித்த சனி பகவானை ’குச்சன்’ என்றும் அழைத்தனர்.நாளிடைவில் குச்சனூர் என மாறி நிலைத்துவிட்டது.சனி பகவானை குச்சனூரான் என்றும் அழைப்பதுண்டு.

ஷேத்திர கதாநாயகர் : சனி

தானியம் : எள்

மலர் : வன்னி,கருப்பு குவளை

வஸ்திரம் :கருப்பு நிற ஆடை

ரத்தினம் : நீலம்

வாகனம் :காக்கை


தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 8.30

ஆடி சனி தோறும் விழாக்கோலம் .மூன்றாம் சனிக்கிழமை சனி பகவானின் திருக்கல்யாணம்.சுயம்பு மூலவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் அபிஷேகம்.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 58 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் அருள்மிகு சனி பகவான் ஆலயம்,குச்சனூர்

1 Comment:

வடுவூர் குமார் said...

குச்சனூர் தினகரன் மூலம் சனி பகவானின் திருத்தலத்தை கொண்டு வந்ததற்கு.. மிக்க நன்றி.