அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்,திங்களூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்ததாக கருதப்படுவது சந்திரன்.தேவர்களும் அசுரகளும் மந்தார மலையை மத்தாக அமைத்து வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த போது பல பொருள்கள் கிடைத்தன.அவ்வாறு கிடைத்த பொருள்களில் ஒருவர் தான் சந்திரன்.சந்திரன், திருமாலின் மார்பில் உதித்தவன் என்றும் அத்திரி முனிவருக்கு அனுசுயா தேவி மூலம் பிறந்தவர் என்றும் கூறுவதுண்டு.
திங்களூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் சுமார் 5 கிமி தொலைவில் உள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : பெரியநாயகி
ஷேத்திர பாலகர் : சந்திரன்
வாகனம் : வெள்ளை குதிரை
தரிசன நேரம் : காலை 7 - 12 மாலை 4 - 8
திங்களூர் கோவில் ஸ்தலத்தில் இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.உள்ளே தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு கஜல்ட்சுமியும், வடக்கு ப்க்கம் துர்க்காதேவியும்,ச்ண்டிகேஸ்வரரும் காட்சி தருகிறார்கள்.கிழக்கில் இடதுபுறத்தில் ஷேத்திர பாலகர் சந்திரன் சந்நிதி இருக்கிறது.தெற்கு வழியாக மண்டபத்தில் நுழைந்தால் அப்பூதி அடிகள்,அவர் குடும்பத்தார் திருஉருவச்சிலைகளும்,வலது புறம் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருஉருவச்சிலையும் உள்ளன.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 29, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #18 (அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்,திங்களூர்) |
Sunday, July 22, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #17 (அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம்,சூரியனார் கோவில்) |
அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் முதன்மையாகக் கருதப்படுவது சூரியன்.வாரத்தின் முதல் நாளான ஞாயிறு சூரியனின் பெயரைக் கொண்டே ஏற்பட்டுள்ளது.சூரியன் காசிப முனிவருக்கு அதிதி பால் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஆதித்தன் என்ற பெயர் உண்டாயிற்று.
சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது.ஆடுதுறைக்கு தெற்கில் இரண்டு கி.மி தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது.
இறைவன் : ஸ்ரீ சிவசூரியநாராயணமூர்த்தி
இறைவி : சாயாதேவி,உஷாதேவி
தீர்த்தம் : சூர்யப்புஷ்கரணி
ஸ்தலவிருக்ஷ்ம் : வெள்ளெருக்கு
தரிசன நேரம் : காலை 6 - 12.30 மாலை 4 - 8.30
சூரியனார் கோவில் ஸ்தலத்தில் சூரிய பகவான் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது.இராஜகோபுரத்திற்கு வெளியே சூர்யப்புஷ்கரணி என்ற மூன்று நிலைகளோடு ஐந்து கலசம் தாங்கி உயர்ந்து நிற்கிறது.சிவசூரியநாராயணமூர்த்தி இடதுபுறத்தில் உஷாதேவியும் வலதுபுறத்தில் சாயாதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7நிமி 53 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம்,சூரியனார் கோவில்
Sunday, July 15, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #16 (ஸ்ரீ வல்வில் இராமர் திருகோவில் திருப்புள்ளம் பூதங்குடி) |
ஸ்ரீ வல்வில் இராமர் திருகோவில் திருப்புள்ளம் பூதங்குடி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது
எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில்
சுவாமிமலையிலிருந்து 5 கி.மி தொலைவில் உள்ளது.
மூலவர் : வல்வில் இராமர் : புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : ஹேமாம்புஜவல்லி பொற்றாமறையாள்
தீர்த்தம் : ஜடாயு ,கிரதபுரம்
விமானம் : சோபன விமானம்
இராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது அவனை எதிர்த்து போரிட்ட சடாயு ,இராவணன் வாளினால்
துண்டிக்கப்பட்டு ராமா ராமா என்ற சத்தத்துடன் மரணபடுக்கையில் கிடக்க, அவ்வழியே வ்ந்த இராம
லட்சுமணர்கள் இக்குரல் கேட்டு அருகில் சென்று பார்க்க,சீதையை இராவணன் கவர்ந்து சென்ற விவரத்தை
தெரிவித்து விட்டு உயிர் துறந்தார்.இராமர் அவருக்கு இருதி கடன் செய்த தலம்.திருமங்கையாழ்வாரால் 10
பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் டவுன்லோட் ஸ்ரீ வல்வில் இராமர் திருகோவில் திருப்புள்ளம் பூதங்குடி
Sunday, July 8, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #15 (ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் திருகோவில் திருக்குளந்தை) |
ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் திருகோவில் திருக்குளந்தை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
ஸ்ரீ மாயக்கூத்தன் (அ) சோரநாதன் திருகோவில், பெருங்குளம்
நவதிருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் திருப்புளிங்குடியிலிருந்து நேராகச் செல்லும் சாலையில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 7 மைல் தூரம் ஏரல் செல்லும் பேருந்தில் சென்றும் இறங்கலாம்.திருக்குளந்தை பெருங்குளம் என்ற பெயரில் இப்போது விளங்குகிறது.
மூலவர் : சோரநாதன் ஸ்ரீனிவாஸ பெருமாள் : நின்ற திருக்கோலம் ,கிழக்கே திருமுக மண்டலம்
உற்சவர் : மாயக்கூத்தர்
தாயார் : குளந்தைவல்லித்தாயார் அலமேலு மங்கைத்தாயார் என்ற இரண்டு உபய நாச்சியார்கள்
தீர்த்தம் : பெருங்குளம்
விமானம் : ஆனந்த நிலய விமானம்
பெருமாள் நெஞ்சில் கமலாதேவி இடம் பெற்றுள்ள திருக்காட்சியும் இங்கு காணலாம்.சோரனான (அஸ்மாசரன் மீது) நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமானுக்கு சோரநாதன் என்று திருநாமம் ஏற்பட்டது.நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Monday, July 2, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 14 (அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர்) |
அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சிவபெருமான் அந்தகாசுரனை வதைத்த தலமே திருக்கோவிலூர்.திருக்கோவலூர் என்பது பழைய பெயர்.
கருவறையில் லிங்க ரூபமாய் அருள் புரிகிறார் சிவபெருமான் .அன்னை சிவானந்தவல்லி,பெரியநாயகி எனும் பெயர்களில் தனி சந்நிதியில் அருள் புரிகிறார் .வடபுறத்தில் துர்கையம்மனும் முன்னர் கணபதியும் அருள் புரிகின்றனர்.
சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் வாழ்ந்தவர்தான் 63 நாயன்மார்களில் ஒருவரான மெய்பொருள் நாயனார்.தன் உயிர் போகும் நிலையிலும் தன்னை தாக்கியவர் சிவனடியார் வடிவிலிருந்ததால் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு,அந்த செய்தியை கேட்ட பின்னரே சிவனோடு கலந்த மெய்பொருள் நாயனாரின் ஜீவ சமாதி அம்பாள் சந்நிதிக்கு தெற்கே அமைந்துள்ளது.
இத்தகு சிறப்பு கொண்ட திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை நதிக்கரையில் உள்ளது.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர்