அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்,ஆம்புர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
இந்த ஆலயத்தில் குடிகொண்டு இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் சுயம்பு ஆஞ்சநேயராக சுமார் 11 அடி உயரம் கொண்டு அருங்காட்சி அளித்து வருகின்றார்.ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் தெற்கு நோக்கி இருந்தாலும் கிழக்கு நோக்கி பார்வை செலுத்தி வருகின்றார்
1489 ஆம் ஆண்டு விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் நமது நாட்டை ஆண்ட போது பலிஜா சமூகத்தினரின் அன்பான வேண்டுகோளை ஏற்று இந்த ஆலயத்தை புதுப்பித்ததாக ஆலய கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
சனீஸ்வரனை தன் கால்களால் மிதித்து ஆணவத்தை அழித்த புண்ணிய ஸ்தலம் தான் ஆம்புர்
பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்.
அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் ஒரு கால் பதித்த இடம் இதுவென்றும் மற்றொரு கால் பதித்த
இடம் ஆம்புர் நகரின் அருகே உள்ளே ஆனைமேடு என்று புராணம் கூறுகிறது.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Wednesday, June 6, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 13 (அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்,ஆம்புர் ) |
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 12 (அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்,திருமுக்கூடல்) |
அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்,திருமுக்கூடல் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில் காஞ்சியிலிருந்து 20 கி.மி. தொலைவில் உள்ள பழையசீவரத்தின் அருகில் உள்ளது லட்சுமி நரசிம்மர் ஆலயம்.இதன் எதிரில் பாலாறு,செய்யாறு,வேகவதியாறு ஆகிய மூன்று நதிகளும் கூடும் திருமுக்கூடலில் உள்ளது அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்.
மூலஸ்தானத்தில் வலதுபுறம் பிருகு முனிவர் தவம் செய்யும் நிலையிலும் ,இடதுபுறத்தில் பூமாதேவியும் காட்சி கொடுக்கிறார்கள்.சங்கு சக்கரதாரியாய் அபய ஹஸ்தத்துடன் மூலவர் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.பெருமாளின் திருமார்பில் அலர்மேலு மங்கையும்,பத்மாவதி தாயாரும் காட்சியளிக்கிறார்கள்.ஆழ்வார்கள் சன்னிதியும் வரப்பிரஸாதியான கர்ண குண்டலத்துடன் கூடிய கர்ண குண்டல ஆஞ்சநேயர் சன்னிதியும் அமைந்துள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சீவரம் பார்வேட்டைக்கு பழையசீவரம் எழுந்தருளும் போது அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவிலுக்கும் எழுந்தருள்கிறார்.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
http://podbazaar.castmetrix.net/download/144115188075856842/1/TamilPodcast12VaaramOruAlayamVenkatesaPerumalThirukovilThiruMukkoodal.mp3
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 11 (அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி) |
அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுகுடியில் உள்ளது அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்.நாகப்பட்டினம் நகரிலிருந்து தென்மேற்காக சீராவட்டம் என்னும் பிரிவு சாலையிலிருந்து மேற்கே 4 கீ.மீ தொலைவில் உள்ளது எட்டுகுடி.
மூலவர் முருகப்பெருமான் மூவிரு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் திருவாட்சியுடன் வடக்கு பார்த்த மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளது.இக்கோலம் அனைத்தும் மயிலின் இரு கால்களால் தாங்கி உள்ளது.மூலஸ்தான பின்புறம் பெருமாள் ஸ்ரிதேவி பூதேவியுடன் காட்சி தரும் தனி சன்னிதி உள்ளது.தென்பக்கம் பிரதான விநாயகர் சன்னிதி உள்ளது.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Monday, June 4, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# பத்து (ஸ்ரீ சர்வமங்கள ஸமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் சுருட்டப்பள்ளி) |
ஸ்ரீ சர்வமங்கள ஸமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் சுருட்டப்பள்ளி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சென்னையிலிருந்து 56 கிமி தொலைவில் தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் சயன சிவமாக பள்ளிக்கொண்டீஸ்வரர் காட்சியளிக்கிறார்.
விஜய நகரத்து மன்னர் ஹரிஹர புக்கரால் பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு இத்திருக்கோயில் கட்டப்பட்டதால் சைவத்திருமறையில் இடம்பெறவில்லை.
வால்மீகேஸ்வரர்(வால்மீகி பூஜித்த லிங்கம்) ராமலிங்கேஸ்வரர் (ராமர் பூஜித்த லிங்கம்) லிங்கோத்பவர்( லிங்கதில் சிவன் நிற்கிறார்) ,கௌரி ஸ்மேத தக்சிணாமூர்த்தி மற்றும்
சப்த மாதாக்களும் இத்திருக்கோயிலின் சிறப்பு.
இத்திருக்கோயிலில் பள்ளிக்கொண்டீஸ்வரர் சர்வமங்கள (பார்வதி) மடியில் சயனத்தில் காட்சியளிக்கிறார்.இதே போல் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை பார்க்கலாம்.சிவனை இங்கே (சுருட்டப்பள்ளி) மட்டும் தான் காண முடியும்.இங்கே மஹா பிரதோஷம் மற்றும் மஹாசிவராத்திரி மிகவும் சிறப்பு.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
ஸ்ரீ சர்வமங்கள ஸமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் சுருட்டப்பள்ளி