அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில் ,குடவாயில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருவாரூர் மாவட்டத்தில் ,திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கொடைவாசல் திருத்தலம் உள்ளது.
தற்போதய பெயர் : கொடைவாசல் (குடவாயில்)
இறைவன் : கோணேஸ்வரர்
இறைவி : பெரிய நாயகி
தலமரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த்த தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:00 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
பிரளயகாலத்தில் நிலமெல்லாம் கடல் சூழ்ந்தபோது ,ஒரு குடத்தில் வேதங்களை வைத்து சிவலிங்கத்தால் குடத்தின் வாயிலை அடைத்து பாதுகாக்கப்பட்டது. ஆனால் பெருவெள்ளத்தால் குடம் குமபகோணத்தையடுத்துள்ள குடமூக்கு என்ற பகுதியில் ஒதுங்கிவிட்டது. பின்னர் இறைவனின் திருஉள்ளப்படி அந்தக் குடம் மூன்றாக உடைந்து அடிப்பாகம் கும்பகோணத்திலும் ,நடுப்பாகம் திருக்கலயநல்லூரிலும், வாய்ப்பாகம் குடவாயிலிலும் விழுந்தன.
குடவாயில் செங்கணான் ,கருடன் வணங்கிய புராணங்களுக்கு ஆடியோவைக் கேட்கவும்
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 27, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #70 அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில் ,குடவாயில் |
Sunday, July 20, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #69 அருள்மிகு கஜசம்ஹாரமூர்த்தி ஆலயம், வழுவூர் |
அருள்மிகு கஜசம்ஹாரமூர்த்தி ஆலயம், வழுவூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் சாலையில் ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வழுவூர்.
தற்போதய பெயர் : வழுவூர்
இறைவன் : கஜசம்ஹாரமூர்த்தி ,கிருத்திவாசேஸ்வரர்
இறைவி : பாலகுசாம்பிகை
தலமரம் : தாருகை
தீர்த்தம் : ஈசான தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:00 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
பிரளயகாலத்தில் நிலமெல்லாம் கடல் சூழ்ந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் வழுவின காரணத்தால் வழுவூர் ,வழுவை எனப் பெயர் ஏற்பட்டதாகப் புராணம் தெரிவிக்கிறது. அட்ட வீராட்டத் தலங்களில் கஜமுகாசுரனைக் கொன்றத் தலம் வழுவூர். நடன சபைகளில் ஞான சபையாகப் போற்றப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 13, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #68 அருள்மிகு வேங்கைநாதர் திருக்கோவில், திருவேங்கைவாசல் |
அருள்மிகு வேங்கைநாதர் திருக்கோவில், திருவேங்கைவாசல் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
புதுக்கோட்டையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இத்திருத்தலம். திருக்கோகர்ணத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
இறைவன்: வேங்கைநாதர் ,வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி: பிரகதாம்பாள்,பெரியநாயகி
தலமரம் : வகுளம்
தற்போதைய பெயர் : வேங்கைவாசல் (வகுளாரண்யம்)
வேங்கை உருவில் வந்த இறைவன் ,காமதேனுவைத் தடுத்தாட்கொண்ட இடம் தான் திருவேங்கைவாசல் திருத்தலம். அன்னை பிரகதாம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன. சிற்பி சிலையை உருவாக்கியபோது தேவியின் வலது கட்டைவிரலில் ஒரு பகுதி தட்டையாக அமைந்துவிட்டதால் குளத்தில் வீசிவிட்டு வேறொரு சிலை செய்து பிரதிஷ்டை செய்தனர். பின்னர் தேவியின் அருளால் குளத்தில் வீசப்பட்ட சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு வேங்கைநாதர் திருக்கோவில், திருவேங்கைவாசல்
Sunday, July 6, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #67 அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர் |
அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் கொரடாசேரிக்கு அருகில் உள்ளது திருக்கொள்ளம்புதூர் .கும்பகோணம் - கொரடாசேரி பேருந்து பாதையில் செல்லூரில் இறங்கியும் இத்தலத்திற்கு செல்லலாம்.
இறைவன்: வில்வவனநாதர்
இறைவி: அழகிய நாச்சியர்
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் ,அர்ச்சுன தீர்த்தம்
தலமரம் : வில்வம்
தற்போதைய பெயர் : கொள்ளம்புதூர்
பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தபோது , கௌமிய முனிவரின் அறிவுரைப்படி அர்ச்சுனன் இத்தலத்து இறைவனை வணங்கி வழிப்பட்டு பசுபதாஸ்திரம் பெற்றான். பல சிவாலயங்களை தரிசித்துக் கொண்டு திருக்கொள்ளம்புதூருக்கு வந்த போது திருஞானசம்பந்தர் , வெள்ளத்தின் காரணமாக ஓடக்காரர்கள் இல்லாமல்,துடுப்பு இல்லாமல் ஓடத்தில் அமர்ந்து "கொட்டமே கமழும்" என்ற பதிகத்தைப்பாடி அக்கரை வந்து சேர்ந்து இறைவனை தரிசித்தார்.இதனால் முள்ளியாற்றுக்கு இப்பகுதியில் "ஓடம் போக்கி ஆறு" என்ற பெயர் ஏற்பட்டது
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர்