அருள்மிகு தீபப்பிரகாசர் திருக்கோவில், திருத்தண்கா(தூப்புல்,காஞ்சி) பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
இத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ளது. சின்னகாஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோவிலிருந்து 2 மைல் தொலைவிலும், மற்றொரு திவ்ய தேசமான அட்டபுயக்கரத்திலிருந்து மேற்கே 1 மைல் தொலைவில் உள்ளது.
மூலவர் : தீபப்பிரகாசர் :விளக்கொளிப்பெருமாள் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் : மரகதவல்லி
தீர்த்தம் : சரஸ்வதி தீர்த்தம்
விமானம் : ஸ்ரீகர விமானம்
தற்போதைய பெயர் : தூப்புல்
மஹாவிஷ்ணு பிரம்மன் செய்த யாகத்தை அழிக்க வந்த அக்னி ரூப அரக்கனை பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு வெளிச்சம் நல்கினார்.தண்-குளிர்ச்சி ,கா-சோலை .குளிர்ச்சி பொருந்திய சோலையில் பிரம்மன் வேள்விச்சாலை அமைத்ததனால் திருத்தண்கா ஆயிற்று.இத்தலத்தில் தான் ஸ்ரீசுவாமி தேசிகன் அவதரித்தார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு தீபப்பிரகாசர் திருக்கோவில், திருத்தண்கா(தூப்புல்,காஞ்சி)