அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்,திருநெல்வேலி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
14 ஏக்கர் பரப்பளவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான கோயிலில் காந்திமதிக்கு இடப்பக்கம் நெல்லையப்பர் சந்நிதி.இரண்டு கோயில்களையும் ஏழாம் நூற்றாண்டில் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் தனித்தனியாகக் கட்டியூள்ளான்.பின்னர் வடமலையப்பப் பிள்ளை என்பவர்,இரண்டையும் இணைக்கும் விஸ்தாரமான சங்கிலி மண்டபத்தைக் கட்டியிருக்கிறார்.
இறைவன் : நெல்லையப்பர்
இறைவி : காந்திமதி அம்மன்
ஸ்தல விருக்ஷ்ம் : மூங்கில்
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 9
நெல்லையப்பர் திருக்கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் தாமிர சபையாகத் திகழ்கிறது.நடராஜப்பெருமான் ஆனந்தக்கூத்தனாக அருள்புரிகிறான்.கி.பி 950 -ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இங்கே உள்ளது.இங்குள்ள மணிமண்டபத்தில் ஒரே கல்லில் நுட்பமாக உருவாக்கப்பட்ட 48 சிறுதூண்களையும் ஒரு நாணயத்தால் தட்டும்போது,ஒவ்வொரு தூணிலிருந்தும் ஒவ்வொரு விதமான இனிய சத்தம் கிளம்புவது பிரமிக்க வைக்கிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 23விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, October 28, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #31 (அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்,திருநெல்வேலி) |
Monday, October 22, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #30 (அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்,திருக்குற்றாலம்) |
அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்,திருக்குற்றாலம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் இருந்து 5 Km தொலைவில் குற்றாலம் சிவஸ்தலம் உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் தென்காசி.
இறைவன்: குற்றாலநாதர்
இறைவி : குழல்வாய் மொழியம்மை
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 9
குற்றாலநாதர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றால அருவிக்கு அருகிலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. குற்றாலநாதர் ஆலயத்திற்கு அருகே சித்திர சபை திகழ்கிறது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் இருக்கே நடுவே சித்திர சபை அமைந்திருக்கிறது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 23விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்,திருக்குற்றாலம்
Sunday, October 14, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #29 (அருள்மிகு சனி பகவான் ஆலயம்,குச்சனூர்) |
அருள்மிகு சனி பகவான் ஆலயம்,குச்சனூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சுயம்பு வடிவத்தில் தோன்றிய சனீஸ்வர பகவான் இந்தியாவிலேயே இவர் ஒருவர் தான்.தேனி நகரத்திலிருந்து தெற்கே 20 கி.மி தூரத்தில் உள்ளது குச்சனூர்.குச்சனூர் கிராமம் முல்லையாற்றுக் கரையில் அமைந்திருக்கிறது.செண்பக மரங்கள் கொண்ட சோலையாக இருந்தபோது செண்பகநல்லூர் எனப் பெயர் கொண்டது.குச்சுப்புல் குடிலில் சுயம்புவாகக் காட்சியளித்த சனி பகவானை ’குச்சன்’ என்றும் அழைத்தனர்.நாளிடைவில் குச்சனூர் என மாறி நிலைத்துவிட்டது.சனி பகவானை குச்சனூரான் என்றும் அழைப்பதுண்டு.
ஷேத்திர கதாநாயகர் : சனி
தானியம் : எள்
மலர் : வன்னி,கருப்பு குவளை
வஸ்திரம் :கருப்பு நிற ஆடை
ரத்தினம் : நீலம்
வாகனம் :காக்கை
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 8.30
ஆடி சனி தோறும் விழாக்கோலம் .மூன்றாம் சனிக்கிழமை சனி பகவானின் திருக்கல்யாணம்.சுயம்பு மூலவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் அபிஷேகம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 58 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, October 7, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #28 (ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர்) |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #28 (ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர்)
ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது.மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வடத்திருக்கூடலூர் என்றும் கூறுவர்.
மூலவர் : வையம்காத்த பெருமாள் : கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் : புஷ்ப்பவள்ளி
தீர்த்தம் : சக்ரதீர்த்தம்
விமானம் : சுத்தஸ்தவவிமானம்
நந்தக முனிவரோடு தேவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வழிபட்டமையால் இதற்கு கூடலூர் என்று பெயர் ஏற்பட்டதாக கூறுவர்.திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.ராணி மங்கம்மாளுக்கு இக்கோவிலில் சிலையெடுக்கப்பட்டுள்ளது.இக்கோவிலின் உட்புற மதில்சுவரில் இருக்கும் கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்