அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயம்,கஞ்சனூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் ஆறாவது கிரகமாக விளங்குபவர் சுக்ர பகவான்.சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவருக்கும் கியாதி என்ற பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்.தேவகுருவான பிரகஸ்பதிக்கு நிகராக சகல கலைகளிலும்,சாஸ்திரங்களிலும் வல்லவர்.சிவபெருமானைக் குறித்து தவம் இருந்து "மிருத சஞ்சீவினி" வரத்தை பெற்றவர்.சுக்ர பகவானின் பரிகார தலமான கஞ்சனூர்.
கும்பகோணத்தில் இறங்கினால் கிழக்கில் 18 கி.மி தொலைவில் உள்ளது கஞ்சனூர்.கும்பகோணத்திலிருந்து 2A,2B,38,54 போன்ற நகர பேருந்துகள் கஞ்சனூர் செல்லும்.மயிலாடுதுறையிலிருந்தும் பஸ் வசதிகள் உண்டு.
இறைவன் : அக்னீச்வரர்
இறைவி : கற்பகாம்பிகை
ஷேத்திர கதாநாயகர் : சுக்ரன்
தானியம் :மொச்சை
மலர் : வெண்தாமரை
வஸ்திரம் :வெள்ளைநிற ஆடை
ரத்தினம் : வைரம்
உலோகம் : வெள்ளி
தரிசன நேரம் : காலை 8 - 12 மாலை 4 - 8.00
ஆலயத்தின் இராஜகோபுரம் தெற்கு நோக்கி இருக்கிறது.உள்ளே கொடிமரம்,முன் மண்டபத்தை கடந்து வந்தால் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் காசி விஸ்வநாதர்,விசாலாட்சியும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.
ஆலயத்தின் உள்ளே முதலில் இருப்பது அன்னை கற்பகாம்பிகையின் ஆலயம்.அடுத்தது இறைவன் அக்னீச்வரரின் ஆலயம்.இரண்டுமே கிழக்கு நோக்கி தான் உள்ளன.மேற்கு பக்கமாக நந்தி மற்றும் நடராஜர்,நவக்கிரக பீடம்,சனி பகவான் ஆகியோர் உள்ளனர்.இத்தலத்தில் முன்று இடங்களில் முன்று சனீஸ்வரர் திருஉருவச் சிலைகள் இருப்பதும் விசேஷம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 26, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #22 (அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயம்,கஞ்சனூர்) |
Sunday, August 19, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #21 (அருள்மிகு ஆபத்ஸஹாயேஸ்வரர் ஆலயம்,ஆலங்குடி) |
அருள்மிகு ஆபத்ஸஹாயேஸ்வரர் ஆலயம்,ஆலங்குடி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
பஞ்சாரண்யத் தலங்களில் ஒன்றான ஆலங்குடிக்கு காசி ஆரண்யம் என்றும் திருஇரும்பூளை என்றும் பெயர்கள் உண்டு. இத்தலத்தில் கோயில்கொண்டிருக்கும் இறைவன் மூலவர்
ஆபத்ஸஹாயேஸ்வரர். இறைவியின் பெயர் ஏலவார் குழல் அம்பிகை. நவக்கிரகத் தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது ஆலங்குடி.
தலம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் இருக்கிறது ஆலங்குடி. நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலும் கும்பகோணம் ம்ன்னர்குடி சாலையில்
(நீடாமங்கலம் வழி) கும்பகோணத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவிலும் உள்ளது. தலவிருட்சம் பூளைச் செடி. இரனால் இத்தலத்திற்கு திரு இரும்பூளை என்ற பெயர் உண்டாயிற்று.
இறைவன் : ஆபத்ஸஹாயேஸ்வரர்
இறைவி : ஏலவார் குழல் அம்பிகை
ஷேத்திர பாலகர் : குரு
வாகனம் : யானை
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 8:30
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மூவராலும் பாடல் பெற்ற தலம் ஆலங்குடி. இறையருளால் சுந்தரர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பூலோகத்தில் மீண்டும் பிறந்து தேவாரம் பாடி தமிழ் மணம் பரப்பி
சைவத் தொண்டில் ஈடுபட்டார். இத்தலத்திருகுச்
சுந்தரர் வந்தபோது காவிரியாகிய வெட்டாறு வெள்ளப்பெருக்கெடுத்தோடியது. இறைவனே ஓடக்காரனாக வந்து திருவிளையாடல் புரிந்து
சுந்தரரையும் உடன் வந்த அடியார்களையும் கைப்பற்றிக் கப்பாற்றியதாக வரலாறு. படகு ஆற்றில் அமிழ்ந்த இடம் ’அமிழ்ந்தீஸ்வரம்’ என்றும், படகு பாறையில் மோதி உடைந்த இடம்
’கப்பலுடையான்’ என்றும், இறைவன் கைப்பிடித்துக் காப்பாற்றிய இடம் ’கைப்பத்தூர்’ என்றும் இப்போதும் விளங்குகின்றன.
இத்திருத்தலத்தின் பெருமையும் தலபுராண வைபவமும் மிகவும் சிரேஷ்டமாக விளங்குகிறது. இக்கோவிலில் பஞ்சபருவ உற்சவமும் - மாதாந்திர குருவாரம் தோறும் நடைபெறும் விசேஷ
தரிச்ன்மும் - குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மறுராசிக்கு பிரவேசிக்கும் புண்ணிய காலங்களிலும் - மாசி மாதம் வரும் குருவாரமும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சித்திரை
பௌர்ணமியை முதற்கொண்டு பத்து நாள் உற்சவம், தக்ஷிணாமூர்த்தி தேர்த் திருவிழாவுடன் கொண்டாடப்படுகிறது. தைபூசம், பங்குனி உத்திரத்தில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 9 நிமி 17 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 12, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #20 (அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்,திருவெண்காடு) |
அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்,திருவெண்காடு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருவெண்காடு நவக்கிரகங்களில் புதனுடைய தலம்.கல்வி,அறிவு,பேச்சுதிறமை,இசை,சோதிடம்,கணிதம்,புலமை ஆகியவற்றை தர வல்லவர் புதன்.இவருக்கு வித்யாகாரகன் என்றும் பெயர். புதனுக்குப் பிடித்த நிறம் பச்சை. சாத்வீக குணம் சூரியனிடமிருந்து பிரகாசத்தை இழுத்து செடி, கொடிகளை பச்சை நிறமாக்கும் தன்மை உடையவர். பச்சைப் பயிறு தானியத்தை தானம் கொடுத்தால் ப்ரீதி அடைவார்.
தலம்: மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ., சீர்காழியில் இருந்து 10 கி.மீ., பூம்புகாரிலிருந்து 8 கி.மீ. பஸ் உண்டு.
இறைவன் : ஸ்வேதாரண்யேஸ்வரர்
இறைவி : பிரம்ம வித்யாம்பிகை
ஷேத்திர பாலகர் : புதன்
வாகனம் : குதிரை
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 9
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடிய பெருமை இத்தலத்திற்கு உண்டு. காசிக்கு இணையான ஆறுதலங்களுள் இதுவும் ஓன்று. இத்திருத்தலத்திற்கு சுவேதவனம் என்று பெயர் (சுவேதம் என்றால் வெண்மை. வனம் என்றால் காடு). இக்கோயிலில் சுவேதாரண்யர், அகோர முர்தி, நடராஜர் என்று மும் மூர்த்திகள். பிரம்மவித்யாம்பிகை, அஷ்டபுஜ துர்கை, காளி என்று மூன்று அம்பிகை சந்நதிகள். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று சுவாமி புஷ்கரணிகள். ஆலமரம், கொன்றை, வில்வம் என்று மூன்று தல விருக்ஷங்கள்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 5, 2007
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #19 (அருள்மிகு வைத்தியநாதர் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்) |
அருள்மிகு வைத்தியநாதர் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் சூரியசந்திரனுக்குஅடுத்ததாக கருதப்படுவது அங்காரகன் எனும் செவ்வாய்.செவ்வாய் தலங்களில் விசேஷமானவை புள்ளிருக்கு வேளூர்,சிறுகுடி ,பழனி முதலியவை.இவற்றுள் மிகப்
பிரமாதமானது புள்ளிருக்கு வேளூர்.புள்ளிருக்கு வேளூர் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது,வைத்தீஸ்வரன் கோவில் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.
நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்குத் தெற்கில் மூன்றாவது கிரகமாக விளங்குபவர் செவ்வாய் (அங்காரகன்) அசுபகிரகம்.சிவபெருமானின் நெற்றி வியர்வையில் தோன்றி பூமாதேவியால்
வளர்க்கப்பட்டவர் என்பது ஒரு கருத்து.பராசர முனிவரின் மகனாக பிறந்து,பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் என்பது இன்னொரு கருத்து.நர்மதை நதிக்கரையில் பரத்வாஜ முனிவரின் ஆத்ம
சக்தியால் தோன்றி பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் என்பது இன்னொரு கருத்து.வீரபத்ரர் தக்ஷ்ன் யாகத்தை அழித்ததும் கோபம் தணிந்து ,அங்காரக வடிவம் பெற்றார் என்றும் சில புராணங்களில்
குறிப்பிடபட்டுள்ளன.
சிவப்பு நிறமான இவர்,ராஜ குணமுள்ளவர்.அழகானவர்.மாலினி ,சூலினி என்று இரண்டு மனைவிகள்.பெருந்தன்மை,நேர்மை,துணிவு,வைராக்யம் போன்ற நல்ல குணங்களைக் கொடுத்து
கவுரமும் அந்தஸ்தும் கிடைக்கச் செய்வார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் இருக்கிறது வைத்தீஸ்வரன் கோவில் திருத்தலம்.சீர்காழி தலத்திலிருந்து 5 கி.மி. மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மி.
இறைவன் : வைத்தியநாதர்
இறைவி : தையல்நாயகி
ஷேத்திர பாலகர் : அங்காரகன்
வாகனம் : ஆட்டுகிடா
தரிசன நேரம் : காலை 7 - 12 மாலை 4 - 8.30
கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்கள் இருந்தாலும்,மேற்கு கோபுர வாசல் வழியாகத்தான் அனைவரும் செல்கிறார்கள்.முலவரான வைத்தியநாதர்,சுயம்புலிங்கமாக எழுந்தருள்கிறார்.தீராத 4448
நோய்களை தீர்க்க ,கயிலாயத்திலிருந்து சிவ-பார்வதி பூலோகத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்தனர்.
இத்தலத்தில் அம்மை-அப்பருக்கு அடுத்தபடியாக சிறப்பு பூஜை பெறுபவர்கள் - செல்வமுத்துகுமாரசுவாமி என்றழைக்கப்படும் முருகர்.அடுத்தது அங்காரகன்."முத்தையா" என அன்பர்களால்
காதலுடன் அழைக்கப்படும் தேவியருடன் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால்,பட்டென்று தோஷம் விட்டுப்போகும்.
புள்ளிருக்கு வேளூர் என்பது தேவாரப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பழமையான பெயர்.ஜடாயு (புள்) பறவை ,ரிக்வேதம் (இருக்கு),முருகன் (வேள்),சூரியன் (ஊர்) - இந்த நால்வரும்
வழிபட்டதால் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்