அருள்மிகு திருக்கள்ளீஸ்வரர் ஆலயம், திருக்கண்டலம் (திருக்கள்ளில்) பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சென்னையிலிருது இத்தலம் வர சில நேரங்களில் பேருந்து உண்டு, சென்னை கோயம்பேட்டிலிருந்து பெரியபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி 37 - ஆவது கி.மீ உள்ள கண்ணிகைப் பேர் (கண்ணிபுத்தூர்) இறங்கவேண்டும். அங்கிருந்து இடதுபக்கம் திருக்கண்டலம் சாலையில் 3 கி.மீ சென்று கோயிலைடையலாம்.
இறைவன் : சிவானந்தேஸ்வரர்
இறைவி : ஆனந்த வல்லி
தலமரம் : கள்ளிச்செடி
தீர்த்தம் : நந்தி தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தற்போதைய பெயர் : திருக்கண்டலம்
தரிசன நேரம் : திருக்கோயிலுள் அர்ச்சகர் இல்லம் உள்ளதால் இரவு 8 மணிக்குள் எந்த நேரத்தில் சென்றாலும் தரிசிக்கலாம்.
பூசைக்காலங்கள்: காலை சந்தி-காலை 8 மணி; சாயங்காலபூசை - மாலை 5 மணி.
திருஞானசம்பந்த சுவாமிகள் இத்தலம் வந்தது, சிவபெருமான் பூஜைப்பெட்டியை மறைத்ததினால் ’கள்வர்’ யாரோ என் பெட்டியை எடுத்துச் சென்றனர் எனக் கூறி பதிகம் பாடியதால் ’திருக்கள்ளம்’ திருக்கள்ளில் என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கள்ளிச்செடிக் கீழ் இறைவன் தோன்றியதால் திருக்கள்ளி(ல்) என்று பெயர் ஏற்பட்டதாயும் கூறுகின்றனர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 53 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு திருக்கள்ளீஸ்வரர் ஆலயம், திருக்கண்டலம் (திருக்கள்ளில்)