அருள்மிகு நரசிம்மேஸ்வரர் ஆலயம், ஐயம்பேட்டைசேரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அடுத்த காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் கிளைசாலையின் வலப்பக்கமாக 7 கிமி பயணித்தல் ஐயம்பேட்டைசேரி கிராமம் வரும். இங்கிருந்து வலது பக்கமாக செல்லும் சாலையில் 1 கிமி தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
தற்போதய பெயர் : ஐயம்பேட்டைசேரி ( பழைய பெயர் : தியாகமுகசேரி,திசைமுகசேரி)
இறைவன் : நரசிம்மேஸ்வரர்
இறைவி : மரகதவல்லி
தலமரம் : வன்னி
தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 7.30 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
திசைமுகன் என்பது பிரம்மாவைக் குறிக்கும். பிரம்மனின் விருப்பப்படி அவருக்கு திருமால் பரமபதநாதராக இந்தத் திருத்தலத்தில் காட்சி கொடுத்ததால் திசைமுகச்சேரி என இத்தலத்திற்கு பெயர் ஏற்பட்டது.நரசிம்மமூர்த்தி இரண்யனை வதம் செய்தபிறகு , இரண்யனின் உயிரற்ற உடலைக் கழுத்தில் மாலையாக போட்டபடி சுழன்று உக்கிரத்துடன் ஆடினார். ஈஸ்வரன் நரசிம்மர் முன் சரபராக வடிவெடுத்து அவரை அமைதிபடுத்தினார். தன்னை சாந்தம்படுத்திய ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கேயே ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டார். இது நடந்தது இத்தலத்தில் தான்.அதனால் தான் ஈஸ்வருக்கு நரசிம்மேஸ்வரர் என திருநாமமும் ஏற்பட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
அருள்மிகு ஐராவதேஸ்வரர் ஆலயம், அத்திமுகம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
ஓசூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரம் , ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கி.மீ பயணித்தபின் இடப்பக்கம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தூரம் செல்ல வேண்டும்.
தற்போதய பெயர் : அத்திமுகம் ( பழைய பெயர் : ஹஸ்தி முகம்)
இறைவன் : ஐராவதேஸ்வரர் , அழகேஸ்வரர்
இறைவி : காமாட்சி அம்பாள் , அகிலாண்டவல்லி அம்பாள்
தலமரம் : வன்னி தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 7.30 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
பசுமை பொங்கும் அழகிய கிராமமான அத்திமுகத்தில் தேவர் தலைவனான இந்திரன் தனது வாகனமான ஐராவதத்தில் வந்து இங்கு இறைவனை வழிபட்டதால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என பெயர் வழங்கலாயிற்று. எனினும் இங்கு மூலவராக அமர்ந்திருப்பவர் அருள்மிகு அகிலாண்டவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ அழகேஸ்வரர் .
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
இத்திருத்தலம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.
திருவாலி -- (திருநகரி)
மூலவர் : அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மர்) கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம் தாயார் : பூர்ணவல்லி தீர்த்தம் : இலாக்ஷண புஷ்கரணி விமானம் : அஷ்டாசர விமானம்
திருமால் நரசிம்ம அவதாரம் செய்த போது இரண்யனை வதம் செய்து சீற்றம் அடங்காமல் இருப்பதைப் பார்த்து அழிவிலிருந்து பூவுலகம் காக்கப்பட வேண்டும் என்று அனைவரும் பிராட்டியை வேண்ட , பிராட்டி எம்பெருமானின் தொடையில் வந்து அமர்ந்தார். அமர்ந்த பிராட்டியை எம்பெருமான் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்தில் இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதால் திருவாலி என்றாயிற்று.மேலும் எம்பெருமான் திருமணக்கோலத்தில் திருவாலிக்கும் , திருநகரிக்கும் இடைப்பட்ட வேதராஜபுரம் என்ற இடத்தில் வரும்போது ,திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த , எம்பெருமான் திருமங்கையின் செவிகளில் அஷ்டாச்சர மந்திரத்தை உபதேசம் செய்தார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க : ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 56 விநாடி
இத்திருத்தலம் திருநாங்கூரின் மத்தியில் அமைந்துள்ளது.
மணிமாடக்கோவில் -- (திருநாங்கூர்)
மூலவர் : நாராயணப்பெருமாள்(நந்தா விளக்கு) கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் தாயார் : புண்டரீகவல்லி நாச்சியார் தீர்த்தம் : இந்திர புஷ்கரணி,ருத்ர புஷ்கரிணி விமானம் : ப்ரணவ விமானம்
திருமங்கையாழ்வார் நாராயணனை நந்தா விளக்கே என போற்றுகிறார். ஒருவராலும் தூண்டப்படாமல் தானாகவே ஒலியுடன் திகழும் தூண்டா விளக்காகும். அதாவது நித்யமான பிரகாசமான் ஞானத்தை உடையவன் என்பது பொருள். அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்த இந்த ஸ்தலத்தில் பெருமாள் எழுந்தருளியிருப்பதால் திருமணிமாடக்கோயில் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.இந்த மணிமாடக்கோயில் நாராயணனே பத்து திருமேனிகளை எடுத்துக் கொண்டு தான் ஒரு திருமேனியாக வந்ததாகவும் கூறுவர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க : ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 56 விநாடி
இத்திருத்தலம் திருநாங்கூரின் மத்தியில் அமைந்துள்ளது.
திருச்செம்பொன்செய் கோவில் -- (திருநாங்கூர்)
மூலவர் : செம்பொன்ரங்கர் தாயார் : அல்லிமாமலர் நாச்சியார் தீர்த்தம் : ஹேம புஷ்கரணி விமானம் : கனக விமானம்
இராவணனை வதம் செய்தபின் இராமபிரான் இத்தலத்தில் இருந்த த்ருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி , தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அந்த பசுவை ஒரு அந்தணனுக்கு தானம் செய்தார். அதைக் கொண்டு இந்தக் கோவிலைக் கட்டியதால் இதற்கு செம்பொன்செய் கோவில் என்று பெயர் வந்ததாயும் கூறுவர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க : ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 56 விநாடி
தஞ்சாவூர் நகரைத் தாண்டியதும் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இந்த வெண்ணாற்றங்கரையில் இப்போது மூன்று கோவில்கள் உள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமான்கள் எழுந்தருளியுள்ளனர்.மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரு திவ்யதேசமாகவே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று கோவில்களும் ஒரு பர்லாங் சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளது.
1. தஞ்சை மாமணிக் கோவில்
மூலவர் : நீலமேகப் பெருமாள் தாயார் : செங்கமலவல்லி தீர்த்தம் : கன்னிகா புஷ்கரணி விமானம் : சௌந்தர்ய விமானம்
2. மணிக்குன்றம்
மூலவர் : மணிக்குன்றப் பெருமாள் தாயார் : அம்புச வல்லி தீர்த்தம் : ஸ்ரீ ராம தீர்த்தம் விமானம் : மணிக்கூட விமானம்
3. தஞ்சையாளி நகர்
மூலவர் : நரசிம்மர் தாயார் : தஞ்சை நாயகி தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி விமானம் : வேதசுந்தர விமானம்
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க : ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 56 விநாடி
திருக்கோழி என்னும் உறையூர் திருச்சி நகருக்குள்ளேயே உள்ளது. திருச்சி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் உள்ளது.
இறைவன்: அழகிய மணவாளன் இறைவி: கமலவல்லி நாச்சியார் தீர்த்தம் : கல்யாண தீர்த்தம் தற்போதைய பெயர் : உறையூர்(திருக்கோழி) பதிகம் : திருமங்கையாழ்வார்
சோழநாட்டின் அரண்மனையைச் சேர்ந்த யானையொன்று ஊருக்குள் வந்தபோது ஒருகோழி அதனை எதிர்த்து யுத்தம் செய்து தனது கால் நகங்களினாலும் , அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றும் அதனால் இவ்வூருக்கு கோழியூர் என்ற பெயருண்டாக்கித் திருக்கோழியாயிற்று. இங்கு கமலவல்லி நாச்சியார் வடதிசை நோக்கி திருமணத்திற்கு தயார் நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுகிறார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க : ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
am Nataraj Prakash basically from chennai but currently residing in Los angeles.I have a great passion for Tamil and temples.Temples fascinate me not just because of its glory and religion but also it is the symbol of our rich heritage and culture.Some of the great architectures are amazing.So i have tried to present it in a podcast in easy narration in Tamil each week.I have also attached mp3 for you to download.I would sincerely appreciate you could hear it and let me know your thoughts.I also play tennis at USTA 4-4.5 level.